பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

எந்த வம்புக்கும் ஒரு பாதிரியாரும் பெண்ணும் காரணமாக இருப்பார்கள். —ஜெர்மனி பாதிரிமார்களுக்கும் பெண்களுகன்கும் மறதி என்பதே கிடையாது. — ஜெர்மனி பாதிரிமார்கள் முதலில் தங்களையே ஆசீர்வதித்துக் கொள்கிறார்கள். — ஜெர்மனி குடியானவர்களுக்கு மனைவியர் இருக்கும்வரை பாதிரிமார்களுக்கு விவாகம் அவசியமில்லை —ஜெர்மனி நெருப்பின் அருகில் இறகை வைக்காதே; உன் மனைவி அருகில் பாதிரியாரை விடாதே. — ஜெர்மனி ஒரு சாமியாரால் இருபது பாவிகள் உருவாகிறார்கள். —அயர்லாந்து உபதேசியார் தம் வருமானத்திற்குத் தக்கபடி உபதேசம் செய்தால் போதும். —அயர்லாந்து அளவுக்கு அதிகமாக வைதிகமாயுள்ள சாமியாரை ஆண்டவனுக்கே பிடிக்காது. — பல்கேரியா உபதேசியார் பையும் நரகக் குழாயும் நிறைவதேயில்லை. —எஸ்டோனியா மக்கள் எப்படியோ, அப்படியே குருக்களும் இருப்பர்.

-லத்தீன்

ஒரு செம்புக்காகப் போதகர்கள் எத்தனையோ செம்புகளைப் பாடுகின்றனர். —லத்தீன் ஈக்களும் பாதிரிமார்களும் எந்த வீட்டிலும் நுழையலாம்.

-ரஷ்யா

நல்ல பாதிரியாரின் நட்பும் வேண்டாம், கெட்டவரின் பகையும் வேண்டாம்.

—ஸ்பெயின் நோயற்ற பசுவை நாடிக் காகம் வரும், நோயுற்ற மனிகனை நாடிப் பிராமணன் வருவான். —இந்தியா திருமணம் செய்து கொண்டால் ஒரு வாரம் சுகமா யிருக்கலாம்; ஒரு பன்றியை அடித்தால் ஒரு மாதம் சுகமாயிருக்கலாம்; பாதிரியாகி விட்டால், வாழ்க்கை முழுதும் சுகமாயிருக்கலாம். —போலந்து