பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசப் க் தி எட்டுப் பேர்களுள்ள கிராமத்திலும் ஒரு தேசபக்தன் இருப் பான். -ஜப்பான் (3 u rr ir உனக்கு ஒய்வு வேண்டுமானல், பட்டாளத்தில் சேர். -போலந்து அமைதி செல்வத்தை உண்டாக்குகின்றது: செல்வம் போரை உண்டாக்குகின்றது. -ஃபிரான்ஸ் வென்றவர்கள் அரசர்கள்; தோற்றவர்கள் திருடர்கள், -மங்கோலியா சிப்பாய்களும், நீரும், நெருப்பும், விரைவிலே இடங்களைக் காலியாக்கி விடுவார்கள். -ஜெர்மனி போரில் ஏற்பட்ட நஷ்டங்களை வெற்றி ஒரு காலும் திருப்பிக் கொடாது. -ஜெர்மனி போர்க்களத்தில் புல் முளைப்பதில்லை. -போலந்து போர் இல்லாவிட்டால் நிலையான அமைதி இல்லை. -( ' ) முதலில் தாக்குவோன் இருமுறை தாக்கியவன் ஆவான். -பெல்ஜியம் போர்க்களத்தில் வாளை இரவல் கொடுக்க முடியாது. -அமெரிக்கா வெற்றி கண்டவன் செய்வதெல்லாம் சரிதான். -அமெரிக்கா போர்க்களத்தைவிடச் சிறந்த நீதிபதி முன் இருந்ததுமில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. -அயர்லந்து வெற்றி பெற்றவனுக்குக் களைப்புத் தோன்ருது. -பல்கேரியா போர்வீரர் இருவர், தளபதிகள் ஒன்பது பேர்! -அமெரிக்கா ஒரு சிங்கத்தின் தலைமையில் மான்கள் திரண்டு சென்ருல், அது ஒரு மானின் தலைமையில் திரண்டு வரும் சிங்கப் படையைக் காட்டிலும் வல்லமை மிக்கதா யிருக்கும். -லத்தின்