பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

நாடறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் எதற்கு? — தமிழ்நாடு தீய போதகர்கள் சயித்தானை ஆலயத்துள் அழைத்து வந்து விடுவர். —இங்கிலாந்து ஒவ்வொரு மனிதனும் தன் வீட்டிற்குக் குரு. — இங்கிலாந்து போதகர் எப்படியோ, அப்படி மக்கள். — இங்கிலாந்து போதகர்களுக்குள் சண்டை வந்து விட்டால், சயித்தானுக்குக் கொண்டாட்டம். —ஜெர்மனி

குருக்கள் உன்னிடம் வந்து விட்டால், மகிழ வேண்டாம்; விரைவில் அவர் யாசகம் கேட்கத் தொடங்குவார்.

-ரஷ்யா

சயித்தான்

தலை நுழையாத இடத்தில் சயித்தான் தன் வாலை நுழைப்பான்.

- இத்தாலி

பிசாசுகளைப் பிசாசுகளைக் கொண்டே ஓட்டவேண்டும்.

- ஜெர்மனி

சயித்தானைப் பற்றிப் பேச்செடுத்தவுடன், அவன் வந்து விடுவான்.

—லத்தீன் சயித்தானின் சிநேகம் சிறைவாசல் வரை. — துருக்கிஸ்தானம் மனித இனத்தின் சயித்தான் மனிதன்தான் — கீழைநாடுகள்

சயித்தான் அடிக்கடி சிலுவையடியிலே அமர்ந்திருப்பான்.

-போலந்து

சயித்தான்களிலே கழிவான சயித்தான் தொழுது கொண்டிருப்பான்.

—போலந்து நீக்ரோக்களின் சயித்தான் வெண்மையா யிருப்பான்.

- பல்கேரியா
சுவரில் சயித்தான் படத்தை வரைபவன் தன் உருவத்தைப் போல வரைகிறான்.

—ஸெக்