பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

சயித்தான் கறுப்பு நிறமே பூசியிருக்கிறான். ஆனால் நம் கண்ணுக்கு அவன் சிவப்பாகவே தோன்றுகிறான்.

— ஃபின்லந்து

சோம்பலுள்ள மனிதனைச் சயித்தான் கண்டால், அவனுக்கு வேலை கொடுத்து விடுவான்.

— இங்கிலாந்து

சயிந்தனை எழுப்புவது எளிது, கிடத்துவது அரிது.

- இங்கிலாந்து

சயித்தான் ஒருபோதும் தொலைவிலில்லை.

— இங்கிலாந்து

நோய் வந்துவிட்டால், சயித்தானும் சாமியாராவான்.

-இங்கிலாந்து

சயித்தானும், தன் காரியத்திற்காக, வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுவான்.

—ஷேக்ஸ்பியர்

விதி

நூல் தீருகிறவரை கழி சுற்றிக்கொண்டே யிருக்கும்.

- ஜெர்மனி
குல்லாவுக்காகப் பிறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக் கூடாது.

— போலந்து

வாழ்க்கையில் அழுதவன் சிரித்துக் கொண்டே சாவான்.
—போலந்து
சில சமயங்களில் மனிதர்கள் தங்கள் விதிகளுக்கு யஜமானரா யிருக்கின்றனர்.

—ஷேக்ஸ்பியர் பாலங்கள் கட்டிப் பாதைகளைச் செப்பனிடுபவனுக்கு இருகண்களும் அவிந்து போகின்றன; கொலையும் தீ வைத்தலுமே தொழிலாயுள்ளவன் நெடுங்காலம் சுகமாக வாழ்கிறான். —சீனா சாகாத விதியுடையவனுக்குத்தான் மருந்து பலிக்கும். — சீனா விதிக்குப் பணிவது அறிவுடைமை. — சீனா