பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

விதியை விலக்கலாம் என்று ஒரு வழியிலே சென்றால், அங்கேயும் அது முன்வந்து நிற்கும். — ஃபிரான்ஸ் பெண்ணிடமாகப் பிறந்த மனிதன் எவனும் விதியைத் தடுக்க முடியாது. —கிரீஸ் நடக்க வேண்டியவை நடந்தே தீரும். — இதாலி நடக்கலாம் என்று நம்பும் விஷயங்களைப் பார்த்து விதி சிரிக்கின்றது. — இங்கிலாந்து தூக்கிலே சாகும் விதியுடையவன் நீரிலே மூழ்கிச் சாகமாட்டான். — இங்கிலாந்து

விதியைத் தாங்குவதுத்தான் அதை வெற்றி கொள்ளும் வழி.

-இங்கிலாந்து

விதியின் தீர்ப்பையே மனிதன் கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றுகிறான்.

— ஜெர்மனி பணிந்தவர்களுக்கு விதி வழி காட்டுகின்றது; பணியாதவர்களை இழுத்துச் செல்கின்றது. — இத்தாலி விதியிலிருந்து தப்பியோட இடமே யில்லை. —லத்தீன் நீருள் ஆழ்ந்து போகும் விதியுள்ளவனுக்குக் கரண்டி நீர் போதும். —-யூதர்

தவளை எவ்வளவு துள்ளினாலும், குட்டையிலேயே கிடக்கும்.

—கால்மிக்

ஆடு கத்தியையே எண்ணிப் பார்க்கின்றது; கசாப்புக்காரன் இறைச்சியையே எண்ணுகிறான்.

— குர்திஸ்தானம் சாகத்தான் வேண்டுமென்றால், சிறு மீன்களால் கருவிக் கருவித் தின்னப் படுவதைவிட, பெரிய முதலையால் விழுங்கப் படுவது மேல். — மலாய் கடல் இருந்தால், கடற் கொள்ளைக்காரர்களும் இருப்பார்கள். —மலாய் தூக்கில் தொங்குவதும், மனைவி வாய்ப்பதும் விதியின் பயன். — இங்கிலாந்து நீ ஒரு தேனீயானால், உனக்கும் ஒரு கூடு உண்டு. — பல்கேரியா