பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

காலையிலே கூவிய சேவல் மாலையிலே பருந்தின் வாயில் இருக்கிறது. —ஃபின்லாந்து கைக்கும் வாய்க்கும் இடையில் எத்தனையோ விஷயங்கள் நேர்ந்து விடுகின்றன. —கிரீஸ் காய்ந்த மரம் கீழே விழக் காத்திருக்கும் பொழுது, ஒரு பச்சை மரம் சாய்கின்றது! —ஆப்பிரிக்கா ஆறு நிறைய நீர் போனாலும், நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும். —தமிழ்நாடு

எதுவும் உலகில் நடைபெறும்- செல்வம் மிகுந்தவனும் ஓர் ஏழையின் வீட்டை நாடிச் சென்று தட்ட நேரலாம்.

-ரஷ்யா

விதி சிலரைத் தன் சிறகுகளில் தூக்கிச் செல்லும், சிலரைத்

தரையிலே போட்டு இழுத்துச் செல்லும். — ஸ்பெயின் தன் உயிரைப் பற்றி அதிகமாகக் கவனமாயிருப்பவனை ஒரு சருகு விழுந்து கொன்றுவிடும். —ஆப்பிரிக்கா

அதிருஷ்டம்

அதிருஷ்டம் வந்து தட்டும் பொழுது, கதவைத் திறவுங்கள்.

-ஸ்பெயின்

அதிருஷ்டமுள்ளவனுக்குச் சேவலும் முட்டையிடும்.

— கிரீஸ்

அதிருஷ்டம் குருடு, எவர் மடியிலும் போய் விழும்.

- எஸ்டோனியா

கடவுள் 'இழு' என்று சொன்னால், உன் முன் கயிறு வந்து

விழும்; அவர் 'ஏறு' என்று சொன்னால், உன் முன் குதிரை வந்து நிற்கும். — இந்தியா முன்னால் போகும் ஊஞ்சல் பின்னாலும் வரும். — இலங்கை ஆகாயத்திலிருந்து ஈச்சம்பழம் விழுந்தால், நீயும் வாயைத் திற. —சீனா அதிருஷ்டம் வந்தால், யார்தான் வரமாட்டார்? அது வராவிட்டால், யார்தான் வருவார்? —பல்கேரியா