பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

கெட்டதைவிட நல்லதிருஷ்டத்தைத் தாங்கப் பெருங் குணங்கள் தேவை. —ஃபிரான்ஸ் அதிருஷ்டமும் துரதிருஷ்டமும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

— ஜெர்மனி

ஒவ்வொரு மனிதனுடைய வீட்டு வாயிலிலும் அதிருஷ்டம் ஒரு முறையாவது வந்து தட்டும்.

—இத்தாலி

நல்லதிருஷ்டம் வரும்போது நல்ல புத்தி இருப்பது அரிது.

-லத்தீன்

அதிருஷ்டம் ஒருவனுக்குத் தாயாயிருக்கும், மற்றொருவனுக்கு மாற்றாந் தாயாயிருக்கும்.

— இங்கிலாந்து அதிருஷ்டத்தை எதிர்பார்த்திருப்பவனுக்கு மதியச் சாப்பாடு நிச்சயமில்லை. — இங்கிலாந்து மனிதன் அதிருஷ்டத்தைத் தேடுவதில்லை, அதுவே அவனைத் தேடி வருகிறது. — துருக்கி அதிருஷ்டமில்லாவிட்டால், பிறவாமலிருப்பதே மேல். — யூதர் அதிருஷ்டம் கைகளில் வலிமையில்லாதவள்; அவள் கை தூக்கி விட்டவர்களை விரைவில் நழுவவிட்டு விடுவாள்.

-ஜெர்மனி

துரதிருஷ்டம்

நாற்பது ஆண்டுக் காலத்தில் ஒரு சமயம் நான் திருடப் புறப்பட்டேன்; ஆனால் அன்று இரவு முழுதும் நிலவு காய்ந்து கொண்டிருந்தது. —கீழைநாடுகள் சுவர்க்க வாயிலில் ஓர் ஏழை ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்தான்; அவன் கொஞ்சம் கண்ணயர்ந்த நேரத்தில் அது திறந்து அடைத்துக்கொண்டு விட்டது. —பாரசீகம் அதிருஷ்டம் கெட்ட நேரத்தில், ஒட்டகத்தின் மேலுள்ளவனையும் நாய் கடித்துவிடும். —இந்தியா குருடன் கோலை இழப்பது ஒரு தடவைதான். — இந்தியா

அதிருஷ்டம் கெட்ட காலத்தில் உன் கழியே பாம்பாகும்.

-இந்தியா