பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நான் உப்பு விற்றால் மழை பெய்கிறது; மாவு விற்றால் காற்றடிக்கிறது. —ஜப்பான் எனக்கும் பாதரட்சைகள் இல்லாததை எண்ணி நான்

வருந்திக்கொண்டே யிருந்தேன்; பாதங்களே யில்லாத ஒரு மனிதனை நான் கண்டபின், என் வருத்தம் தீர்ந்தது.

—அரேபியா

அதிருஷ்டமில்லாதவன் பிரேதங்களுக்குப் போர்த்தும் துணிகளை வியாபரம் செய்யத் தொடங்கினால், அப்புறம் எவரும் சாவதில்லை.

— அரேபியா அதிருஷ்டம் கெட்ட பெண்ணுக்கு வருடத்திற்கு இரண்டு குழந்தைகள். —ஆப்கானிஸ்தானம் ஆட்டைத் தேடுபவன் ஓநாயைக் கண்டான்! — ஃபிரான்ஸ் அரண்மனையிலிருந்து பால் கிடைத்தால், அதிலே ஒரு சுண்டெலி மிதக்கும்! { —ஜெர்மனி அதிருஷ்டமில்லாதவன் கூழிலும் துரும்பு கிடக்கும்.

- வேல்ஸ்
கடல் முழுதும் தேனாக மாறியதும், ஏழை மனிதன் எடுத்துக் குடிக்கும் தன் கரண்டியைத் தொலைத்து விட்டான்.

— பல்கேரியா இன்று மனிதன், நாளைக்குச் சுண்டெலி. — இங்கிலாந்து

மூட நம்பிக்கை

எல்லா மக்களுக்கும் மூட நம்பிக்கைகள் உண்டு.
— இங்கிலாந்து
-ஆள் மேலே இடி விழுந்த பிறகு, இடி விழும் பலனைப் பஞ்சாங்கத்தில் பார்க்க வேண்டியதில்லை.

— சீனா ஆடுகள் ஆடுகளையே தொடர்ந்து செல்லும். —யூதர்