பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

ஆச்சரியமானதும் அற்புதமானதும் ஒரு வாரத்துக்கு வியப்பா யிருக்கும். —ஆப்பிரிக்கா ஒருவன் தன் கோடரியை விழுங்கப் போவதாகச் சொன்னால், நீ அதன் காம்பைப் பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய். —ஆப்பிரிக்கா

மூட நம்பிக்கை மனவலிமை யில்லாதவர்களின் மதம்.

- இங்கிலாந்து

மூடநம்பிக்கை இறைவனில்லாத சமயம்.

— இங்கிலாந்து

நோயும் துக்கங்களும் வருகின்றன, போகின்றன; ஆனால் மூடநம்பிக்கையுள்ள ஆன்மாவுக்கு அமைதியேயில்லை.

-பர்ட்டன்

மூடநம்பிக்கை இறைவனை மறுப்பதாகும்.

— பேகன் அந்த இகழ்ச்சியான பொருளை நசுக்குங்கள். —வால்டேர் மூட நம்பிக்கை மனத்தை விஷமாக்கி, அதன் அமைதி அனைத்தையும் அழித்து விடுகின்றது. —லத்தீன் புரியாத விஷயத்திற்கு நாமாகக் கற்பித்துக் கொள்ளும்

விளக்கம் மூடநம்பிக்கை, அது காலங் கடந்தும் தங்கி நிற்கும்.
-இங்கிலாந்து

நாளும் கோளும்

குறி சொல்பவனுக்குத் தன் விதியே தெரியாது. —ஜப்பான்

ஏழைகள் ஜோசியர் வீட்டை விட்டு வரமாட்டார்கள்; செல்வர்கள் மருந்துக் கடையை விட்டு வரமாட்டார்கள்.

— சீனா

சோம்பேறி ஜோசியனாகிறான்.

—அரேபியா வெள்ளி, செவ்வாயில் புறப்படவும் வேண்டாம், போய்ச் சேரவும் வேண்டாம். —அரேபியா