பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலை யா ைம நிலையாமை ஒன்றே நிலையானது. -தமிழ்நாடு ஒர் இடத்தைத் தன்னுடையது என்று சொல்பவனைக் கண்டு பூமியே சிரிக்கின்றது. -இந்தியா "எனக்கு நேரமிருக்கும்பொழுது செய்கிறேன் என்று சொல் லாதே; உனக்கு நேரமிருக்கும் என்று யார் சொன்னது? -Աե:Ծոi எல்லா மனிதர்களும் தங்களைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் அநித்தியர்கள் என்று எண்ணுகிரு.ர்கள். -இங்கிலாந்து அநித்தியர்களுக்கு உரியதெல்லாம் அநித்தியமே: -கிரீஸ் எல்லாப் பொருள்களும் பூமியிலிருந்து தோன்றியவை: எல்லாப் பொருள்களையும் பூமி மறுபடி எடுத்துக் கொள்கின்றது. -கிரீஸ் நீ அநித்தியமானவன் என்பது நினைவிருக்கட்டும். -கிரீஸ் அழகாக மலர்வது விரைவாக வாடும். -எஸ்டோனியா இயற்கை இயற்கையின் விளக்கத்தைத் தொடர்ந்து செல்பவன் ஒரு காலும் வழி தவருன். -ஜெர்மனி ஒரு மரத்திலுள்ள கனிகளை எண்ண முடியும்; ஆல்ை கனியினுள் இக்ருகும் மரங்களை எண்ண முடியாது. -ஆங்கில நாடோடிகள் ஒரு உப்பை உண்டவன் தண்ணிர் குடிப்பான். -இந்தியா எறும்புக்கு பனித்துளியே வெள்ளமாகும். -இந்தியா ஆறுகள் இயற்கையில் இனிய நீருடன் ஒடுகின்றன. அவை கடலில் கலந்த பிறகே உவர்ப்பாகின்றன. -இந்தியா