பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.i காற்றில் ஆடாத மரமில்லை. -இந்தியா நாரையின் வெண்மை பறக்கும் போதே தெரியும். -இலங்கை மரத்தடியிலே இரட்டிப்பு மழை. -இலங்கை மேற்கே பார்த்துக் கொண்டிருந்தால், சூரிய உதயத்தைத் காணவே முடியாது. -ஜப்பான் இலைகள் அதிகமாயிருந்தால், கனிகள் குறைவாயிருக்கும். -அரேபியா நெருப்புக்கும் நீருக்கும் இரக்கம் கிடையாது. -குர்திஸ்தானம் நெருப்புக்கும் நீருக்கும் சிறிதுதான் வேற்றுமை. -மலாய் வாழை ஒரு முறைதான் குலை கள்ளும். -மலாய் தண்ணிருக்குள் கல் அழுகுவதில்லை. -கீழை நாடுகள் தனித்திருக்கும் ஒநாய் சிங்கம்தான். -கீழை நாடுகள் கறுப்புக்கு அப்பால் நிறமில்லை. -ஆப்கானிஸ்தானம் சந்திரன் பல மலர்களைப் பார்க்கும், மலர்கள் ஒரு மதியையே பார்க்கும். -பாரசீகம் குதிரைகளுக்குத்தான் வயதைப் பார்க்கவேண்டும். -ஃபிரான்ஸ் நாம் தாகமில்லாமல் பருகுகிருேம்; எந்த நேரத்திலும் காதல் புரிகிருேம்; நமக்கும் விலங்குகளுக்கும் இதுவே வேற்றுமை. -ஃபிரான்ஸ் ஆப்பிள் கனி மரத்திலிருந்து தொலைவில் போய் விழுவ தில்லை. -ஜெர்மனி பகலுக்கு இரவு தேவை. -ஜெர்மனி ஒர் ஆந்தை வெளியே வந்துவிட்டால் மற்ற இரண்டு பின் தொடரும். -போலந்து 3- •]L ء مھگ