பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 (மனிதனே தன்னிலும் மேம்பட்ட அதிமானிடன கப் பரிணமிக்க முடியும் என்ற கொள்கையுடையவர் நீட்ஷே என்ற தத்துவஞானி.) மனிதனுக்கு மனிதன் கடவுள். -கிரீஸ் பெரும்பாலான மனிதர் தீயவர். -கிரீஸ் மனிதன் பகுத்தறிவுள்ள விலங்கு. -லத்தீன் மனிதன் தனக்கு எவ்வளவு வேண்டியவனே அதைவிட அதிக மாகத் தேவர்களுக்கு வேண்டியவன். -லத்தீன் மனிதனுக்கு மனிதன் ஒநாயாக இருக்கிருன். -லத்தீன் மனித சமூகத்தை விட்டு மேலெழுந்து நிற்காத மனிதன் ஒர் அற்பப் பொருளாவான். -செனிகா ஒரு மனிதனைத் தெரிந்து கொள்வதினும், பத்து நாடுகளைத் தெரிந்து கொள்ளல் எளிது. -யூதர் வாழ்க்கை இளந் தளிர்களும் உதிர்ந்த சருகுகளும் எங்குமே காணப் பெறுகின்றன. -இந்தியா சில சமயம் மூழ்குதல், சில சமயம் மேலெழுதல் : இதுதான் வாழ்க்கை. -இந்தியா வாழ்க்கை காற்றின் நடுவிலுள்ள ஒரு தீபம். -ஜப்பான் வாழ்க்கை என்பது அன்பும் மனைவியும். -ஜப்பான் உணவுக்காகவும், உடைக்காகவுமே நாம் இரண்டு கால் களாலும் ஒடித் திரிகிருேம். -- - -சீன உன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உன் சரித்திரத்தில் ஒர் ஏடாகும். -அரேபியா சுவர்க்கத்திற்குச் செல்வோன் பயிற்சி நிலையமே வாழ்க்கை. -அரேபியா வாழ்க்கை. இரு பகுதிகளுள்ளது: ஒன்று கழிந்தகாலம் என்ற கனவு, மற்றது வருங்காலம் என்ற விருப்பம். -அரேபியா