பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 நீ காலையைக் கண்டிருக்கிருய், இன்னும் மாலையைக் காண வாழ்க்கை மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கடன்தான்; மரணம் என்னும் கடன்காரன் அதைப் பெற்றுக் கொள்ள ஒருநாள் வருவான். -யூதர் வாழ்க்கை என்பது இடைவிடாத குடிவெறி-மகிழ்ச்சி மறைந்த பின்பும், தலைவலி இருந்துகொண்டே யிருக்கும். -பாரசீகம் மூச்சு வருவதும் போவதும் தொட்டிலின் ஆட்டம்: முடிவான தாக்கம் வருமுன் எச்சரிக்கையா யிரு. -பாரசீகம் வாழ்க்கை ஒரு வெங்காயம், அதை உரிக்கும்பொழுது, கண்ணிர் வரும. -ஃபிரான்ஸ் வாழ்க்கை என்னவென்று நாம் தெரிந்து கொள்ளுமுன், பாதி வாழ்க்கை கழிந்து விடுகின்றது. ஃபிரான்ஸ் வாழ்க்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகின்றது; இர்ண்ட்ாம் பகுதி. முதற் பகுதிக்காத வருந்துவதில் கழிகின்றது. -ஃபிரான்ஸ் நாம் வருகிருேம்,_அழுகிருேம், இதுதான் வாழ்க்கை: நாம் அழுகிருேம், போகிருேம், இதுதான் மரணம். - -ஃபிரான்ஸ் நேற்று, இன்று, நாளே ஆகிய மூன்று நாட்களே மனிதனின் நாட்கள். -ஃபிரான்ஸ் மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்கு கி ருன் : -ஜெர்மனி பன்னிரண்டு வயதில் குழந்தைப் பருவத்தைப் புதைக்கிருேம்: பதின்ெட்டில் வாலிப்ப் பருவத்தையும், இருபதில் முதற் காதலையும், முப்பதில் மனித்ரிட்ம் கொண்ட் நம்பிக்கையை யும், அறுபதிலிருந்து சிறிது சிறிதாக ஐம்புலன்களையும் புதைத்து விடுகிருேம். -ஜெர்மனி ஒவ்வொரு மணியும் (நேரமும்) நம்மைக் காயப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. கடைசி மணி அடித்தவுடன் ஆவி பிரிகின்றது. -ஜெர்மனி