பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பெண்பிள்ளைக்கு இருமுறை பயித்தியம் பிடிக்கும்; அவள் காதல் கொண்ட சமயம், தலை நரைக்கத் தொடங்கும் சமயம். -பாரசீகம் குடியானவனுக்கு வேண்டியது நிலம், பிரபுவுக்குக் கெளரவங் கள், சிப்பாய்க்கு யுத்தம், வியாபாரிக்குப் பணம், விவசாயிக்கு அமைதி, தொழிலாளிக்கு வேலை, சித்திரக் காரனுக்கு அழகு, பெண்ணுக்கு உலகம் முழுவதும் தேவை. -பாரசீகம் பாடும் பெண்ணுக்கு அகமுடையான் தேவை. -அல்பேனியா அழகான பெண்ணும், நீண்ட கிழிசலுள்ள அங்கியும் எந்த ஆணியிலும் மாட்டிக் கொள்ளும். -இங்கிலாந்து விகாரமான ஸ்திரீ வயிற்றுவலி, அழகுள்ளவள் தலைவலி. -இங்கிலாந்து பத்துவயதில் பெண் தேவகன்னியா யிருப்பாள், பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போலிருப்பாள், நாற்பதில் சயித்தாளுவாள், எண்பதில் சூனியக்காரியாவாள். -இங்கிலாந்து பெண்ணின் முன்பாகத்திற்கும் கழுதையின் பின்பாகத்திற்கும், பாதிரியாரின் எல்லாப் பாகங்களுக்கும் எச்சரிக்கையா யிருக்கவேண்டும். -இங்கிலாந்து பெண்களுக்கும், குருமார்களுக்கும். கோழிகளுக்கும் எவ்வளவு இருந்தாலும் போதாது. -இங்கிலாந்து பெண்பிள்ளை சயித்தானை வென்று விடுவாள். -அயர்லந்து உயிருள்ள வரை பெண்களுக்கு வர்ணங்களில் ஆசையிருக்கும். -அயர்லந்து சணலை நெருப்பிலிருந்து காப்பது கஷ்டம். -ஸ்காட்லந்து வாயாடியின் வாய் சயித்தானின் அஞ்சல் பை. -வேல்ஸ் பெண்கள் சயித்தானின் சாட்டைகள். -வேல்ஸ் பெண் உள்ளம் தாமரை இலைமேல் உருளும் நீர்த்துளிபோல் நிலையற்றது. -சயாம்