பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 உறுதியான செருப்பு வேண்டுமானல், ஒரு பெண்ணின் நாவை அடித்தோலாக வைத்துத் தைக்க வேண்டும்-அது ஒரு போதும் தேயாது. -ஃபிரான்ஸ் மூன்று விலங்குகளே தம்மைச் சிங்காரித்துக் கொள்வதில் நேரத்தைக் கழிப்பவை-அவை பூனைகள், ஈக்கள், பெண்கள். -ஃபிரான்ஸ் மனிதனின் பணப்பைக்காகவே பெண் படைக்கப் பெற்றிருக் கிருள். -ஃபிரான்ஸ் ஆயுதங்களேயும், பெண்களேயும், பூட்டுக்களையும் தினந்தோறும் பார்த்துவர வேண்டும். -ஜெர்மனி கன்னிப் பருவம் சாந்திமயம், கற்பு முக்தி நிலை, விவாகம் ைெறவாசம். -ஜெர்மனி கன்னிப் பருவம் கதிரவன், கற்பு சந்திரன், விவாகம் இரவு. -ஜெர்மனி ஒரு கன்னி எதையும் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் Պ-ւ I-II Ա) - -ஜெர்மனி ஒரு சேவல் பன்னிரண்டு கோழிகளை அடக்கியாளும்; ஒரு பெண் ஆறு ஆடவர்களை அடக்கியாள்வாள். -ஜெர்மனி துணையில்லாமல் செல்லும் பெண்ணுக்கு எல்லோரும் துணை யாகச் சுற்றுவார்கள். -ஜெர்மனி நூறு தெள்ளுப் பூச்சிகளைக் காத்துவிடலாம், ஒரு கன்னியைக் கட்டிக் காப்பது கஷ்டம். -போலந்து கெட்ட பெண்ணிடம் அவளைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல்லு: நல்ல பெண்ணிடம் உன் விருப்பம்போல் பேசு. - -போலந்து கன்னிப் பெண்ணிடம் உன் விருப்பம் போல் நடக்கலாம். விதவையிடம் அவள் விருப்பம் போலவே நீ நடக்க வேண்டும். -போலந்து பெண்ணின் யோசனையால் பயனில்லை யென்ருலும், அதை ஏற்றுக்கொள்ளாதவன் பாடு அவலம்தான். --வேல்ஸ் நீண்ட தலைக்காரிக்கு ஆழமில்லாத உள்ளம். -பல்கேரியா