பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள். -பல்கேரியா (மேலை நாடுகளில் கம்பள நூல் நூற்றல் கன்ன்ரியர் செய்யவேண்டிய தொழில்.) பெண்கள் சீட்டியடித்தால், சயித்தானுக்குச் சிரிப்பு அடங்காது. -ஜெர்ஸி அத்தையிடம் ஒரு விஷயம் சொன்னற் போதும், அகிலமெல் லாம் பரவிவிடும். -ஸெக் பன்னிரண்டு வயதுவரை உன் மகளுக்குத் தலை வாரிவிடு, பதினறு வயதுவரை பாதுகாத்து வை: பின்னர் எவன் மணந்துகொள்ள வந்தாலும், அவளைக் கொடுத்து. நன்றியும் சொல்லு. -ஸெக் நாய்க்கு மேலாக நாம் குரைக்க முடியாது, காகத்திற்கு மேலாகக் கரைய முடியாது, ஒரு பெண்ணுக்கு மேலாகச் சண்டை போட முடியாது. -ஸ்ெக் ஒரு பெண் சீட்டியடித்தால், ஏழு ஆலயங்கள் அதிரும். -ஸெக் பெண்ணுக்கு மெளனத்தைப் போன்ற ஆபரணம் வேறில்லை, ஆனல் அவள் அதை அணிவது அபூர்வம். -டென்மார்க் வயிரம் போன்ற மகள் மனைவியாகும்போது கண்ணுடியாக மாறுகிருள். -ஹாலந்து பெண்களைப் பெற்றவன் எப்பொழுதுமே மேய்க்கவேண்டிய ஆயன். -ஹாலந்து புதர்களெல்லாம் பெண் இனம். -எஸ்டோனியா (பெருகக் கூடியவை. ஒரு பெண் மற்ருெருத்தியைப் புகழ்ந்து ஒரு போதும் பேச மாட்டாள். -எஸ்டோனியா ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு. ( " ) மனிதன் வேலை காரணமாக வெளியே போகிருன். பெண் தன்னைப் பிறர் பார்ப்பதற்காகப் போகிருள். -பின்லாந்து பெண்ணே அவள் இறந்த பிறகும் நம்பவேண்டாம். -கிரீஸ்