பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 கடல், தீ, பெண்கள், மூன்றும் தீமைகள். -கிரீஸ் பெண்ணின் ஆயுதங்கள் கண்ணிர்த் துளிகள். -ஜியார்ஜியா அதிக வயதாகியும் கன்னியா யிருப்பவள் அஞ்சலில் சேராத கடிதம் போன்றவள். -ஹங்கேரி கோபம் வந்த பெண் கரையில்லாத கடல். -லத்தீன் கன்னியின் இதயம் இருண்ட கானகம். -ரவியா இரண்டு பெண்கள் சேர்ந்தால் ஒரு கடை, மூவர் சேர்ந்தால் ஒரு சந்தை. -ரஷ்யா சிரிக்கிற பெண்ணையும், அழுகிற மனிதனையும் நம்ப வேண்டாம். -ரஷ்யா எந்தப் பெண்களைப்பற்றி அதிகமாய்ப் பேச்சில்லையோ, அவர் கள் மிகவும் நல்லவர்கள். -சைவீஷியா அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும். -ஸ்பெயின் மூன்று பெண்களும், ஒரு - தாயும் ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள். -ஸ்பெயின் கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயே யிருப்பது மேல். -ஸ்பெயின் கெட்ட ஸ்திரிகளைக் காவல் காப்பது வீண் வேலை. -ஸ்பெயின் தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசமாக்குவாள். -ஸ்பெயின் கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம். -ஸ்பெயின் கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள். -ஸ்பெயின் பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள். -ஸ்பெயின் கெட்ட பெண்களிடமிருந்து உன்னைக் காப்பாற்றும்படி ஆண்டவனை வேண்டு; நல்ல பெண்களிடமிருந்து நீய்ே உன்னைக் காத்துக்கொள். -Աեքտմ به س--se-, r_r