பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 காதலுக்கும் செல்வத்திற்கும் துணை வேண்டியதில்லை. -செர்பியா பெண்ணின் காதல் சைத்தானின் வலை. -செர்பியா 'திருமண இரவுதான் காதலின் கடைசி இரவு. -சைலீஷியா காதல் இனிமையான சிறைவாசம். -ஸ்லாவேகியா கெட்டிக்காரப் பெண், தான் காதலிப்பவனை விட்டு, தன்னைக் காதலிப்பவனை மணப்பாள். -ஸ்லாவேகியா செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல. -ஸ்பெயின் காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று. -( ' ) ஒரு காதல் மற்ருென்றை வெளியேற்றிவிடும். -ஸ்பெயின் காதல் சுளுக்குப் போன்றது. இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும். -ஸ்பெயின் ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணிர் போன்றது. -ஸ்பெயின் காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும். -ஸ்பெயின் 'சூப்பிலும் காதலிலும் முதலாவதுதான் சிறந்தது. ( " ) தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை. -ஸ்பெயின் நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குப் பிரிவு. -ஸ்பெயின் சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது. -ஸ்பெயின் காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்துவிட்டது போல எண்ணுவர். -ஸ்பெயின் காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும். -ஜெர்மனி காப்பியும் காதலும் சூடாயிருந்தால்தான் உருசி. -ஜெர்மனி காதல்தான் காதலை வெல்ல முடியும் -ஜெர்மனி காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும், -ஜெர்மனி