பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ստ, காதற் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர், கொண்டு கொடுப்பவர்கள் கொழுக்கிருர்கள். -ஹாலந்து (காதலரின் துரதர்களுக்கு இருபக்கங்களிலும் வெகுமதிகள் நிறையக் கிடைக்கும்.) வானத்தில் பறவையின் பாதையைக் காணமுடியாது. கன்னிகையை நாடும் காதலன் பாதையையும் காண (Մ)ւգ-Ասո 5յ. -எஸ்டோனியா காதலில் துரு ஏருது. -எஸ்டோனியா காதல் என்பது மலர், கலியாணத்தில் அது கனியாகும். -ஃபின்லந்து காதல் நந்தவனம், கலியாணம் முட்புதர். -ஃபின்லந்து காதல் உண்டாக்கும் புண்ணை அதுவே ஆற்றிவிடும். -கிரீஸ் காதல் மடமை இரண்டுக்கும் பெயரில்தான் வேற்றுமை. -ஹங்கேரி கனவிலும் காதலிலும் இயலாத காரியமே இல்லை. -ஹங்கேரி அடிக்கடி முத்தமிட்டால் குழந்தையை எதிர்பார்க்க வேண்டியதுதான். -ஐஸ்லந்து கலியாணத்திற்குப் பின்னல் காதல் வளரும். -ஐஸ்லந்து காதல் கொண்டவர்களின் கோபம் சிலந்தி வலை போன்றது. -இத்தாலி ஒரே . பெண்ணையோ, ஒரே பஸ்ஸையோ தொடர்ந்து ஒட வேண்டாம், பின்னல் வேறு கிடைக்கும். -இத்தாலி காதலிக்கும் காலத்தில் ஜூபிடரும் கழுதையாவார். -லத்தீன் ஜூபிடர்-தேவர்களின் அதிபதியான கடவுள்; கிரீஸில் இவரை சீயஸ்' என்பர்.) - பழைய காதல் ஒரு சிறைச்சாலை. -லத்தீன் காதலின் துரதுவர்கள் கண்கள். -லத்தீன் காதலிலே தோன்றும் கோபம் போலியானது. -லத்தீன் காதலர் கோபம் காதலுக்குப்புத்துயிர். -கிரீஸ்