பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இளமையில் மணம் செய்துகொள், நீ இளமையா யிருக்கும் போதே பெரிய குழந்தைகளை அடைய முடியும். -குர்திஸ்தானம் உடனிருந்து உண்பதும், குடிப்பதும், உறங்குவதுமே விவாகம் என்று நான் கருதுகிறேன். -ஃபிரான்ஸ் ஆகக் கழிவான செருப்புக்கும் ஜோடி சேர்ந்துவிடும். -( ' ) ஒநாயை அடக்கிவைக்க அதற்கு விவாகம் செய்துவை. (முரடயுைள்ள மைந்தன், மனைவி வந்தால் அடங்கி விடுவான்.) -ஃபிரான்ஸ் இளமைத் திருமணம் நீண்டகால அன்பு. -ஜெர்மனி அழகுக்காக கலியாணம் செய்து கொள்பவன் இரவுநேரங்களில் இன்பமாயும், பகல் நேரங்களில் துக்கமாயும் இருப்பான். ஒராண்டு இன்பம் வேண்டுவோர் திருமணம் செய்து கொள்வது நலம்; இரண்டாண்டுகள் இன்பம் வேண்டுமானல், திருமணம் செய்யவேண்டாம். -ஜெர்மனி திருமணம் என்பது காதல் நோய்க்கு வைத்தியசாலை. -ஜெர்மனி போருக்குப் போகும்போது ஒரு முறை தொழவும்; கடலுக்குப் போகும் போது இருமுறை தொழவும்; திருமணம் செய்யும் போது மும்முறை தொழவும். -ஜெர்மனி ஒவ்வோர் ஆதாமுக்கும் ஒர் ஏவாள் இருப்பாள். -போலந்து ஒரு மதுக்கிண்ணமும் பெண்ணும் அருகிலிருந்தால், ஒருவ னுக்குப் பொழுதுபோவது தெரியாது. -போலந்து மூன்று சகோதரர்களில் இருவர் மூளையுள்ளவர், ஒருவன் விவாகமானவன். -போலந்து ஒருவன் மணந்து கொள்வது நல்லதுதான், ஆனல் மணமில்லா திருப்பது அதைவிட நல்லது. -போலந்து திருமணம் செய்வதற்கு முன்பு மூன்று வருடம் இஷ்டம் போல் வாழ்க்கை நடத்திக்கொள், -போலந்து