பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னல் அழுவாள், ஆடவன் பின்னல் அழுவான். -போலந்து கம்பளியை இரட்டையாக மடித்துப் போர்த்துக்கொண்டால், மேலும் குளிருக்கு அடக்கம்தான். -அயர்லாந்து (உறவினருக்குள் விவாகம் செய்து கொள்ளல் மிகவும் நல்லது) முதல் ஆண்டு முத்தமிடும் ஆண்டு, இரண்டாம் ஆண்டு முட்டிப் பாயும் ஆண்டு. -அயர்லாந்து நீ உன் மனைவியை மணந்து கொள்ளும்போதே உன் குழந்தை களையும் மணந்து கொண்டு விட்டாய். -அயர்லாந்து (விவாகமானல், குழந்தைகளின் பாரத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.) மனிதன் காதலிக்கும் பொழுது வசந்தம், கலியான சமயத்தில் பனிக்காலம். -ஸ்காட்லாந்து பணத்திற்காகத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்: பன்ம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும். -ஸ்காட்லந்து பானையாக உருண்டு சென்று மூடியைக் கண்டுபிடிக்கும். (திருமணத்திற்கு ஜோடி சேரும்.) -பல்கேரியா கல்யாணம் ஒரு நாள், இரு நாள்தான். அதன் பலனே நெடுநாள் இருக்கும். -லெக் ஒரு முறை விவாகம் கடமை; இருமுறை தவறு: மும்முறை பைத்தியம். -ஹாலந்து நாலு மரக்கால் நிலக்கரி கொடுத்தால், ஒரு - நாயகன் கிடைப்பான்; ஆனல் ஒரு "டைன்" கோதுமை கொடுத்தால்தான் ஒரு பெண் கிடைப்பாள். * -எஸ்டோனியா சமையல் மோசமானல், ஒரு நாள் நஷ்டம்; அறுவடை மோசமானல், ஒரு வருட்ம் நஷ்டம், விவாகம் மோச மானல் ஆயுள் முழுவதும் நஷ்டம். -எஸ்டோனியா அதிகாலையில் எழுந்தவனும், இளமையில் மணந்தவனும் வருந்தியதில்லை. -எஸ்டோனியா