பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பெண்டாட்டியை அடிப்பவன், அவளுக்கு மூன்று நாள் ஒய்வு கொடுத்து, தானும் மூன்று நாள் பட்டினியிருப் பான். -சுவிட்சர்லந்து உலகம் மெச்சும் நல்லவனை, அவன் மனைவி மட்டும் மோசமான வகைக் கருதுவாள். -யூதர் மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால், கணவனுக்கு அமைதி கிடைக்கும். -ஆப்பிரிக்கா கணவர்களே, உங்கள் மனைவியரை நேசியுங்கள், அவர் களுக்கு எதிராகக் கொடுமையாக இருக்கவேண்டாம். -புதிய ஏற்பாடு நல்ல கணவனைல், மனைவியும் நல்ல வளாயிருப்பாள். -இங்கிலாந்து நல்ல மனைவியால் கணவனும் நல்லவனவான். -இங்கிலாந்து செவிட்டுக் கணவன், குருட்டு மனைவி-இந்தத் தம்பதிகள் இன்பமாயிருப்பார்கள். -இங்கிலாந்து கணவன் வானுலகம் சென்ற பிறகே மனைவியின் ஏச்சு நிற்கும். -இங்கிலாந்து கணவனுக்கு வேண்டியது அறிவு, மனைவிக்கு வேண்டியது அடக்கம். -இங்கிலாந்து கணவர்கள் அடங்கிப் போவதால்தான், மனைவியர் வெறி அதிகமாகின்றது -இங்கிலாந்து புருடன் இறந்ததும், அண்டை வீட்டுக்காரர்கள் அவனுக்கு எத்தனை குழந்தைகள் என்பதை அறிகிருர்கள். (**) சக்கரவர்த்திகளும் தங்கள் மனைவியருக்கு வெறும் கணவர்க ளாகவே தோன்றுவர். -பைரன் ஒரு மகனேடு இருப்பதைவிட, ஒற்றைக் கண்ணுடைய கணவனுடன் வாழ்வதே மேல். -ஸ்பெயின் கணவனைத் தெரிந்துகொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள். -ஸ்பெயின் கணவன் விதிக்கும் தளைகளால் தழும்பு உண்டாகாது. -ரஷ்யா உ. ப.-5