பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மனிதன் எல்லா விஷ ஜந்துக்களுக்கும் மருந்து கண்டுபிடித் இருக்கிறன், ஆல்ை தீய மனைவிக்கு மட்டும் இன்னும் மருந்து காணவில்லை. -ராபலே கெட்ட மனைவியால் கணவனின் கப்பல் உடையும். -ஜெர்மனி இறந்து போன மனைவியும், உயிருள்ள ஆடுகளும் ஒரு மனிதனைச் செல்வனக்கும். -ஜெர்மனி கெட்ட மனைவியை உடையவன் செல்வங்களின் நடுவில் வறுமையில் லாடுபவன். -ஜெர்மனி உன் மனைவி குள்ளமா யிருந்தால், நீ குனிய வேண்டும். -யூதர் மனைவி உறங்கும்பொழுது, (சாமான்) கூடையும் உறங்கு கின்றது. —Աէ5rf மருமகள் வேண்டுமென்று தேர்ந்தெடுப்பதுபோல், மனைவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும், -இத்தாலி இறந்த மனைவியின் துக்கம் வாயிற் கதவோடு சரி. -இத்தாலி வnஸரின் மனைவி சந்தேகத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது. -லத்தீன் (ரோமா புரியில் ஆண்டு வந்த தலைவர்கள் nஸர்கள். வnளலரின் மனைவி, எவரும் சந்தேகம்கொள்ள இடமில்லா மல், அப்பழுக்கற்றவளாக இருக்கவேண்டும்.) பிறர் மனைவியரிடம் ஒரு போதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டாம். -லத்தீன் மனைவி உள்ள கட்டிலில் சண்டையில்லாமல் இராது. -லத்தீன் விவாகமான மனிதன் ஒவ்வொருவனும் தன் மனைவி ஒருத்தி தான் உலகிலே நல்லவள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். -ஸ்பெயின் மனைவியைக் கெளரவிக்காதவன் தன்னையே குறைவு படுத்திக் கொள்ளுகிருன். -ஸ்பெயின் ஊமை மனைவி வாயால் ஏச மாட்டாள். கைகளை நெரித்து ஏசுவாள். -யூதர் மனைவியைப் பற்றிக் குறை சொல்பவன் தன்னையே இழிவு செய்து கொள்கிருன். -ஸ்காட்லந்து