பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 சத்திரத்தின் பக்கத்திலும், முக்குமுனையிலும் உள்ள வீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். -இங்கிலாந்து வீட்டைப் பார்க்கிலும் கதவு பெரிதாயிருக்கக் கூடாது. -( ' ) வீட்டைப் பார்த்தே உடையவனை அறிந்து கொள்ளலாம் -இங்கிலாந்து வாழ்க்கையின் இன்பத்திற்குப் பலவகை இன்பங்கள் தேவை: ஆதலால் அடிக்கடி உன் வீட்டை மாற்றிக்கொள்ளவும். -அரேபியா வெளியே விளக்கு வேண்டும், வீட்டிலே அனல் வேண்டும். Tவிளக்கு-வழி காண்பதற்காக, அனல்-குளிர் காய்வதற் காக. ) -ஆர்மீனியா வெறும் கையோடு வீடு திரும்பினல், உன்னை வீட்டுக்கு உடைய வகை எண்ணிக் கொள்ள வேண்டாம். (வீட்டில் அனைவரும் அலட்சியமாக எண்ணுவர்.) -பல்கேரியா வீடில்லாத,மனிதன் கூடில்லாத பறவை. -ஃபிரான்ஸ் இதயம் எங்கே தங்கியுள்ளதோ அதுவே வீடு. -லத்தீன் என் வீட்டில் நானே அரசன். -ஸ்பெயின் தன் வீட்டில் அமைதி கிடைக்காதவன் பூலோக நரகில் இருக்கிருன். -துருக்கி அண்டை வீட்டுக்காரர் அண்டை வீட்டுக்காரரை நேசி, ஆனல் குறுக்குச் சுவரை இடித்துவிடாதே. -இந்தியா உன் தலைக்குச் சேராத தொப்பியை அடுத்த வீட்டுக்காரர் தலையில் கட்டாதே. -இந்தியா அண்டை அயலார் அனுமதித்தால்தான், நீ அமைதியோடு வாழலாம். -இந்தியா அம்மா_ சொல்வது போல் உண்மை இராது, அயலார் சொல் வதே உண்மை. -இந்தியா