பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பக்கத்து வீட்டுக்காரன் உன் பந்துவைவிட நெருங்கினவன். -அல்பேனியா துருக்கியரைப் பற்றியும், போப்பாண்டவரைப் பற்றியும் பேச்சு வருகிறது; ஆனல் எனக்குத் தொந்தரவு கொடுப்பவன் என் அண்டை வீட்டுக்காரன். -இங்கிலாந்து உன் அண்டை வீட்டுக்காரன் நல்லவன யிருந்தால், உன் வீடு கூடுதலாக நூறு பவுன் பெறும். -லெக் அண்டை அயலான் தயவில்லாமல் எவனும் வாழ முடியாது. -டென்மார்க் மூன்று பேர்களின் பக்கத்தில் குடியிருக்க வேண்டாம்: பெரிய நதிகள், பெரிய பிரபுக்கள், பெரிய சாலைகள். -( ' ) நரிகளைவிட = அதிகமாக நம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களே நம்மைக் கவனிப்பார்கள். -கிரீஸ் நல்லவர்களின் நடுவில் வசித்தல் வெகுதுாரத்தில் புகழப் படுவதை விட மேலாகும். -நார்வே அண்டை வீட்டை விலைக்கு வாங்குவதைப் பார்க்கினும் அண்டை வீட்டானையே விலைக்கு வாங்கு. -ரஷ்யா மனிதன் நண்பர்களில்லாமல் இருக்க முடியும்; ஆல்ை அக்கம் பக்கத்து வீட்டார்கள் இல்லாமல் முடியாது. -ரவியா அண்டை வீட்டுக்காரருக்கு நஷ்டமில்லாமல் நாம் அடையும் இலாபமே இலாபம். -ஜெர்மனி பக்கத்து வீட்டுக்காரரே நாம் முகம் பார்த்துக் கொள்ளும் கண்டிை. -இங்கிலாந்து நண்பர்கள் இல்லாமல் நாம் வாழலாம், அண்டை ஆயலார் இல்லாமல் வாழ முடியாது. -இங்கிலாந்து