பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ல் வாழ்க் கை பழைய வீட்டைச் சீர்ப்படுத்து, பழைய மனைவியைப் போற்று. -இந்தியா வீட்டுக் குப்பையை வீட்டிலேயே அள. -இந்தியா எழு திரைகளைத் தாண்டியும் வேலைக்காரி பின் குறையைக் கண்டு விடுவாய்: யசமாணி அம்மாளின் குறுை ஒரே திரையில் மறைந்துவிடும். -இந்தியா கட்டிலிலே கணவனும் மனைவியும், வெளியிலே அவர்கள் விருந்தினர்கள். -சீன கணவன், மனைவி சண்டை ஒர் இரவோடு சரி. -சீன இல்வாழ்வு முற்றுகைக்கு உட்பட்ட கோட்டை போன்றது: ள்ெளிய்ே யிருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகின்றனர், உள்ளே யிருப்பவர்கள் வெளியேற விரும்புகின்றனர். -அரேபியா ஒரே வீட்டில் இரண்டு சக்களத்திகள் இருப்பதைவிட இரண்டு பெண் புலிகள் இருப்பது நலம். -பாரசீகம் கணவன் கரண்டியால் சேகரித்து வருவதை, நீ மண் வெட்டியால் வெளியே வாரி வாரி இறைக்க வேண்டாம் -இங்கிலாந்து பெண் இல்லையென்ருல், வீடில்லை. -பல்கேரியா நீ வெளியில் எங்கே சுற்றிலுைம், இன்பமயமான உன் வீட்டுக்கு வந்துவிடு. -பல்கேரியா உன் வீடு-உனது ராஜ்யம். -பல்கேரியா அழகான மனைவியும் அருமையான பழைய மதுவும் இருந்தால், நண்பர்கள் பலர் வருவார்கள். -பல்கேரியா பெண் இல்லாத வீடு வாளியில்லாத கிணறு. -பல்கேரியா திருமணப் பெண்ணுக்கு இசையும் அழகும்; விவாகமான பின் பசியும் தாகமும் m -எஸ்டோனியா