பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பதினறு வயது வரை மகன், அதற்குமேல் தோழன்.-இந்தியா குழந்தைகள் இல்லாத வீடு சுடுகாடு -இந்தியா பிரியமுள்ள தந்தையரும் தாயருமே உண்டு; பிரியமுள்ள பிள்ளைகளும் பெண்களும் இல்லை. -சீன பெண் பிறக்கும் பொழுது வெளியே பார்த்துக்கொண்டு வருகிருள், பையன் பிறக்கும் பொழுது உள்ளே பார்த்துக் கொண்டு வருகிருன். -சீன வானத்திற்கு மணி சூரியன், வீட்டுக்கு மணி குழந்தை. -சீன குழந்தையில்லாத செல்வன் சீமானல்லன்: செல்வமில்லாது குழ்ந்தைகளை மட்டும் பெற்றவன் ஏழையுமல்லன். -சீன உங்கள் குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டு மென்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு எப்பொழுதும் கொஞ்சம் குளிரும் பசியும் இருக்கும்படி செய்யுங்கள். விளையும் பயிர் மூளையில் தெரியும். -தமிழ்நாடு ஆணை அடித்து வளர்க்க, பெண்ணைத் தட்டி வளர்க்க. -தமிழ்நாடு ஐந்துக்கு மேலே அரசனும் ஆண்டி. -தமிழ்நாடு (ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்து விட்டால், பெற்றேரின் செல்வம் காலியாகும்.) உன் பையனிடம் உனக்கு அன்பிருந்தால், அவனே அடித்து வளர்க்கவும்; வெறுப்பிருந்தால், தின்பண்டங்களே வாங்கி (அவன் வாயில்) திணிக்கவும். -சீன ஐந்து பெண் குழந்தைகளுள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்ல்ை. (குடும்பத்தின் சொத்து விரைவிலே தீர்ந்து விடும்.) -சீன கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும். -சீன பெண் பிறந்தால், வீட்டுக் கதவுநிலை நாற்பது நாள் அழும். -அரேபியா