பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 குடியானவனுடைய குழந்தைகள் அவன் செல்வங்கள்; கனவானுடைய குழந்தைகள் அவன் கடன்கள்; பிரபுவின் குழந்தைகள் திருடர்கள். போலந்து (முற்காலத்தில் பிரபுக்கள் குடியானவர்களைத் துன்புறுத்தி, நில புலன்களைத் தாங்களே கைப்பற்றி வந்ததால், இப்பழமொழி அவர்களுக்கு எதிராக எழுந்த துவேஷத்தைக் காட்டுகின்றது.) அதிகக் குழந்தைகள் இருந்தால், வீட்டுக் கூரை பிய்ந்து போய் விடாது. -பெல்ஜியம் ஒரு குழந்தையுடன் நீ நடக்கலாம்; இரு குழந்தைகளுடன் சவாரி செய்யலாம்; மூன்ருகிவிட்டால், நீ வீட்டோடு இருக்க வேண்டியதுதான். -இங்கிலாந்து வளர்ப்பதற்குச் சொந்தக் குழந்தையில்லாதவன் அதிருஷ்ட மில்லாதவன். -அயர்லந்து குழந்தையில்லாதவன் சும்மா குந்தியிருப்பது வீண். -அயர்லந்து சண்டையிட இருவர், சமாதானத்திற்கு ஒருவர். -ஸ்காட்லந்து (குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் போதும்.) கிழவர்களும் குழந்தைகளும் இல்லாத வீட்டில் வேடிக்கையும் கலகலப்பும் இருக்கமாட்டா. -ஸ்காட்லந்து குழந்தை தன்னைத் துரக்கிவைத்துக் கொஞ்சுகிறவரை அறியும்; தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துவோரை குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில். -தமிழ்நாடு உன் குழந்தைகள் தீயோரா யிருந்தால், அவர்களுக்குச் சொத்து வைக்க வேண்டாம்; அவர்கள் நல்லோரா யிருந்தால், உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை. -பல்கேரியா குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை. -டென்மார்க் அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை. -எஸ்டோனியா