பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 (ஒரு தந்தை) ஒரு மகனை விட்டு ஒரு மகனிடம் போய் யாசிப்பதைவிட, வீடு வீடாக யாசித்தல் மேல். -ரஷ்யா நல்ல மாற்ருந்தாய்க்குச் சுவர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது. - -யூதர் (அப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாள்.) - முட்டை கோழிக்கு அடைகாக்கச் சொல்லிக் கொடுக்கிறது! -ஆப்பிரிக்கா அன்புக்கு உற்பத்திஸ்தானம் அன்னை. -ஆப்பிரிக்கா அன்னையை எவரோடும் ஒப்பிடக்கூடாது.-அவள் ஈடற்றவள். -ஆப்பிரிக்கா குழந்கை காய்க்கு நங்கூரம்; அவள் இருக்கிற இடத்தைவிட்டு அசைய முடியாது. -அமெரிக்கா கு லம் ஒவ்வொரு பிச்சைக்காரனும் எவனே ஒர் அரசனின் வழி வந்தவன். ஒவ்வோர் அரசனும் ஒரு பிச்சைக்காரனின் வழி வந்தவன். -இங்கிலாந்து குலப்பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன்; கிழங்கைப் போலவே, அவன் பெருமையும் மண்ணுக்குள் மறைந்திருக்கும். -இங்கிலாந்து தாய் வெங்காயம், தந்தை உள்ளிப்பூடு, அவன் மட்டும் ரோஜா அத்தர்! -துருக்கி ஆயன் மகன் ஆயன். -ரஷ்யா