பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி ருங் து வீட்டிலிருக்கும் விருந்தாளி கடவுளுக்கு நிகரானவர். -ஸெக் வருகிற விருந்தினரை வரவேற்று, போகிறவரை விரைவில் வழியனுப்பு. -போப் விருந்தும் மருந்தும் மூன்று நாள். -தமிழ்நாடு மருந்தே யாயினும் விருந்தோடு உண். -தமிழ்நாடு முதல் நாள் விருந்தாளி, மறுநாள் தொந்தரவு. -இந்தியா அம்மான் வீடானலும், ஏழு நாட்களுக்குத்தான் வசதியாயிருக் கும. -இந்தியா விருந்தென்ருல் வீடு நிறையக் கூட்டம்: உபவாசமென்ருல், உல்கமே திரும்பிப் பார்ப்பதில்லை. -சீன விருந்தினன் நாத்திகளுயினும், அவனைக் கெளரவிக்க வேண்டும். -அரேபியா அழைத்து வந்தவனைவிட, அழையாமல் வந்தவன் மேல். -கால்மிக் விருந்துச் சாப்பாடு கடகை அளிக்கப்படுவது. (நாமும் திரும்ப விருந்தளிக்க வேண்டும்.) -ஆப்காளிஸ்தானம் நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வரும்' விருந்தாளி, வீட்டு அம்மாளின் விருந்தாளி பாக்கியசாலி, விட்டுக்காரனின் விருந்தாளி பாக்கியமற்றவன். -ஃபின்லந்து விருந்தாளியின் பார்வை கூர்மையானது. -ஐஸ்லந்து முன் தகவலோடு_வரவும், அன்புடன் வழியனுப்பும்படி போய் விடவும்.-இதுதான் நல்ல விருந்தாளிக்கு அடையாளம். -லிதுவேனியா விருந்தாளி அதிகாலையில் எழுந்திருந்தால், இரவில் அவன் நம்மு -ன் தங்க விரும்புகிருன் என்று தெரிந்து கொள்ள வேண்டும். -ரவி:யா