உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மாணிக்கவாசகர் கொள்கை. "தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்’ என அவர் கூறியிருப்பது காண்க. தாவரம் என்பது, இடம் விட்டு இடம் பெயராமல் ஒரே இடத்தில் இருப்பது என்று பொருள்படும். ஊர்வன, பறப்பன, நடப்பன - எல்லாம் சிங்கமம் ஆகும். ஒரே உயிரியாகிய தாமே தொடர் பில்லாத இத்தனைப் பிறவிகளைத் தனித் தனியாக எடுத்ததாக இவர் கூறியுள்ளார். டார்வின் கொள்கையோ இதனினும் மாறுபட்டது: ஒரே உயிர் பல உடம்புக்குள் புக்குப் பல பிறவிகள் எடுப்பதில்லை; ஒவ்வோர் உயிரியும் ஒன்றுக்கொன்று தாடர்புடையது: எடுத்துக் காட்டாக, - மனிதன் Q தன்னைப்போன்ற விலங்குகளிலிருந்தே தோன்றினான்: L~ -- னித ன் ஒரு தனி வரிசை இனத்தைச் சேர்ந்தவன் அல்ல் ன் ஒரு நீண்ட தொடர் வரிசை இனங்களுள் ஒர் இனத்தைச் சேர்ந்தவனே மனிதன் - என்பது டார்வின் கொள்கை. இதனை, மனிதனின் மரபுவழித் தோற்றம்' The Descent of Man) argör sni iż வில் வர் ந ைகு 三フ ~ ~ 5ாக் சி யு ள்ளார். முதல் உயிர்த் தோற்றம் : முதல் முதல் உயிர் எவ்வாறு தோன்றிற்று என்பது எளிதில் விளக்க முடியாத ஒன்றாகும். இதை அறிந்து கொன்வ இல் உள்ள அருமைப்பாடு காரணமாக, படைப் புக் கொள்கையினராகிய மத வாதிகள், கடவுள்மேல் சுமையைப் போட்டுவிடுகின்றன்ர்: அஃதாவது, கடவுள் என ஒருவர் உள்ளார்: அவர் உலகத்தையும் உயிர்களை யும் படைத்தார் - எனக் கூறி வழுக்கிக் கொள்கின்றனர். ஆனால் அறிவியலார் இவ்வாறு கண்டமூடித்தனமாகப்ட பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியுமா? அவர்கள் 19 இயன்ற மட்டும் ஆராய்ந்து இதுபற்றி ஒரு முடிபு கூற முயன்றுள்ளனர். அதன் சுருக்கம் வருமாறு : . இயற்பியல் (பெளதிகம்) -:வேதியியல் (இரசாயனம்) ஆகிய அமைப்புக்களிலிருந்தும் அந்த அமைப்பின் இயக்க விளைவுகளிலிருந்தும் உயிர் தோன்றிற்று - என்பது ஒருசார் அறிவியல் கருத்து - இதற்கு ஒரு சிறு விளக்கம் வருமாறு :- ஞாயிறு மண்டலத்திலிருந்து இற்றுப் பிரிந்த ஒரு பகுதி, நாளடைவில் வெப்பம் மாறிக் குளிர்ச்சி :யடைந்தும் ஒடுங்கிச் சுருங்கி உருண்டை வடிவம் பெற்றும் (இப்போது நாம் வாழும்) பூவுலகமாயிற்று. இம்மாற்றம் நிகழ - நிகழ இதன் விளைவாக, நீரகம் •(Hydrogen), plu%träth (Oxygen), siful? (Carbon), வெடியம் (Nitrogen), பாசு வரம், கந்தகம் முதலான தனிமங்களும் தண்ணிரும் தோன்றின. இவற்றி விருந்து, உறுத்துதல் - உணர்தல் - இயக்குதல் - வளர் த ல் - இன்ன பிறவான உயிர்ப் பண்புகளை உடைய கூழ் போன்ற ' உயிராற்றல் பொருள்' (Protoplasா) உருவாயிற்று. 'புரோட்டோபிளாசம்’ என ஆங்கி த்தில் உ - இந்த உயிராற்றல் பொருளே உயிருக்கு அடிப்படை யாகும். இதிலிருந்து உயிர்கள் தோன்றின - (இஃது ஒரு வகை வேதியியல் மாற்றச் செயலாகும்) - என்பது அறிவியலார் கருத்து. ஈண்டு தரப்பட்டுள்ள விளச் சம் மிகவும் சுருக்கமானது; விரிப்பின் பெருகும். - ட்ட டு ம் மேற் கூறப்பட்டுள்ள இந்த்க் க்ருத்து, உயிரற்ற பொருளிலிருந்துதான் உயிர் தோன்றிற்று στσόπ னும் கொள்கையினருக்கும் உயிருள்ள பொருளி லிருந்துதான் இன்னோர் உயிர் தோன்றும் என்னும் கொள்கையினருக்கும் இடையே நின்று தக்க பதின் த ரும் -என்றுடநம்பலாம்.ட'திரிபு மாற்றக் கொள் ைக’ என்னும் பரிணாமக் கொள்கை விளக்கம் இம்மட்டோடு நின்று