உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெபுலாக் கொள்கை : கோடிக்கணக்கான அ ன்டுகட்கு முன்னர் விண் வெளியில் முகில் (மேகம்) போன்றதோர் அமைப்பு மு ன்று கொண்டிருந்ததாம். அந்த அ மை ப் பு க் கு புல (Nebula) என்னும் பெயர் கொடுக்கப்பட் டு ள்ளது. நெபுலா என்றால் ஒண்முகில் படலம். ஏதாவது ஒரு பெயர் கொடுக்க வேண்டும் அல்லவா? நெபுலாவின் விரைந்த சுழற்சியினால் அது பல 'பாகங்க ளாகப் பிய்த்து எறியப்பட்டத்ாம். பிய்த்து எறியப் பட்ட பாகங்கள் நாளடைவில் குளிர்ந்தும், அடர்த்தியும் திட்பமும் எய்தியும், சிறு சிறு கோளங்களாக (உருண்டை களாக) மாறினவாம். நெபுலாவின் நடுப் பாகமே. ஞாயிறு மற்ற பாகங்கள் ஞாயிறு மண்டலத்தைச் சேர்ந்த மற்ற கோள்கள் ஆகும். இவ்வாறு கண்டா ராய்ந்து கூறியவர், ஆபிரெஞ்சு வானியல் அறிஞர் லாப்பிலாஸ் (Laplace) என்பவராவார். இவரது கொள் ro + # = - > 5 Lịao T ở Gs. rsirso a;” ( Nebula Theory) என்பது பெயராகும். இக்கொள்கையில் சிலருக்கு முழு நம்பிக்கை கிடையாது. ஆஸ்திரேலிய நாட்டு மெல்போர்ன் மோனாஷ் பல்கலைக் கழகத்தில் இப்போது (1988) கணிதப் பேரா சிரியராக உள்ள டாக்டர் ஆண்ட்ரூ பிரன்டிஸ் (Dr. Andrew Prentice) srsirao ih safah GLoss 5, sv.Ti i 7 லாசின் நெபுலாக் கொள்கைக்கு ஒரளவு மாறுபட்ட கருத்தைக் கூறுகிறார். ஆனால், நெபுலாக் கொள்கை யின் மையக் கருத்தையாயினும் ஒரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் தொடர்ந்து செல்லலாம்: ஞாயிறு கெட்டிப் (Solid) பொருளும் அன்றுநீர்மைப் (Liauid) பொருளும் அன்று ஆவி வடிவமான 23 - வாயுப் பொருளான ஞாயிறு தன்னைத் தானே இடப் பக்கமாகச் சுற்றுகிறது. ஏற்றவற்ற அலைக் கொள்கை : சர் ஜேம்சு ஜீன்சு (Sir James Jeans) என்னும் ஆங்கில அறிவியலார், ஞாயிறுபற்றி ஆராய்ந்து, 1916 ஆம் ஆண்டில், ஏற்றவற் அலைக்கொள்கை (Tida Theory) என்னும் கொள்கையை வெளியிட்டார். பன்னெடுங் காலத்துக்கு முன் ஞாயிற்றின் அண்மையில் வேறொரு விண்மீன் (நட்சத்திரம்) நெருங்கிற்றாம். இவற்றின் ஈர்ப்புக் கவர்ச்சியால், ஞாயிற்றினிடமிருந்து வானளா விய ஏற்றவற்ற அலைகள் எழுந்தனவாம்; இந்தக் கவர்ச் சியின் ஆற்றலால், ஞாயிற்றின் வாயுவடிவில், மாதுளம் பழத்தின் காம்புபோல் ஒரு பகுதி பருத்துத் தோன்றிய தாம்: பருத்த பகுதி நாளடைவில் ஞாயிற்றி விருந்து பிரிந்து சென்று சிறு சிறு துண்டுகள் ஆகியதாம். அத் துண்டுகள் நாளடைவில் குளிர்ந்தும் உருண்டை வடிவம் பெற்றும் LI ) கோள்களாக மாறின. ம். 2. கோள்கள் தோன்றிய வரலாறு. --- இந்தச் சிறு சிறு துண்டுகள் குளிர்ந்து கோள்கள் ஆவதற்கு முன் சுற்றிச் சுழன்று ஞாயிற்றுக்கு அண்மை வில் வந்தபோது, ஞாயிற்றின் கவர்ச்சி ஆற்ற ை ன் இத்துண்டுகளிலிருந்து சில பகுதிகள் பிய்த்து எறியப் பட்டனவாம்; இவ்வாறு பிய்த்து எறியப்பட்ட சிறு சிறு பகுதிகளே துணைக் கோள்கள் (Satellites) ஆகும். துணைக் கோள்கள் தோன்றிய வரலாறு இது. குறிப் பிட்ட ஒரு துணைக்கோள், எந்தப் பெரிய கோளிலிருந்து பிய்த்து எறியப்பட்டதோ - அந்தப் பெரிய கோளையே சுற்றி வரும். எடுத்துக்காட்டு : நாம் வாழும் பூவுலகி லிருந்து பிரிந்த துணைக்கோளாகிய திங்கள் (நிலா) இப்பூவுலகையே சுற்றி வருவது தக்க எடுத்துக்காட்டு. ---