பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 யின் வேகம், மற்ற இரண்டு பகுதிகளின் வேகத்தினும் குறைவு என்பது பெறப்படும். ஞாயிறு என்னும் விண்மீன் மூன்று பிரிவுகளாக அமைந்திருக்க, ஒவ்வொரு பிரிவும் வெவ்வேறு வேகத்தில் சுழல்வதைக் கொண்டு, ஞாயிறு பூமியைப் போல் இறுக்கமாக இல்லை-நெகிழ்ந்து ஆவி வடிவமாக-வாயு வடிவமாக இருக்கிறது என்பதை உணரலாம். ஞாயிற்றிலிருந்து வெப்பமும் விரிகதிர் ஒளியும் வெளியாகும் விதத்தைப் பற்றி, 1939ஆம் ஆண்டில், ட்ாக்டர் பேத்தே (Bethe) என்னும் பேரறிஞர் ஆய்ந்து கண்டு பின்வருமாறு கூறியுள்ளார்: ஞாயிற்றின் நன்னடுப் பகுதி மிகுந்த வெப்பம் உடைமையால், அப் பகுதியில் உள்ள அணுக்கள் மிக்க வேகத்தில் இயங்கு கின்றன; அதனால் அந்த அணுக்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ள, அவற்றின் உட்கரு உடைந்து பேராற்றல் வெளிப்படுகிறது; அந்த ஆற்றல் ஞாயிற்றின் மேற்பரப்பை-வெளிப்பரப்பை எய்தி வெப்பமும் விரி கதிர் ஒளியுமாக வீசுகிறது; இந்த வெப்ப-ஒளியைத் தான், ஞாயிறு மண்டலத்திலுள்ள கோள்கள் பெற்று மிளிர்கின்றனவாம். ஞாயிற்றின் நடுப்பகுதி வெப்பநிலை 4,00,00,000"ப்ா. (நான்கு கோடி) ஆகும். மேற் பரப்பின் வெப்பநிலை 12,000 பா. ஆகும். இதுகாறும் ஞாயிறு குறித்து மேலே கூறியுள்ளவற்றைக் கொண்டு ஞாயிற்றின் உருவ அமைப்பை விளங்கிக் கொள்ளலாம். இவ்வாறு ஞாயிறு வெப்பமும் ஒளியும் வீச வில்லையெனில் பூமியில் உயிரிகள் வாழ வியலாது ஞாயிற்றின் வெப்பம் சிறிது சிறிதாகக் குறைந்து வருவதாகவும், எப்போதோ ஒ: காலத்தில் ஞாயிறு குளிர்ந்து விடும்; அப்போது பூமியி "

5 7

உயிர் வாழ்வது அரிது. என்பதாகவும் அறிவியலார் சிலர் அச்சுறுத்தி வருகின்றனர். ஞாயிற்றின் பரிணாமம் மாப்பேருலகின் திரிபாக்கமாகிய பரிணாமக் கொள் கையை ஆயும் இப்பகுதியில் ஞாயிற்றின் கிரிபாக்கம் (பைோமம் பற்றி விவரிக்க வேண்டியது மிகவும் இன்றி யமையாதது. பல்லாயிரம் கோடி ஆண்டுகட்கு முன், விண்வெளியில் மேகம் போன்றதோர் அமைப்பு சுழன்று கொண்டிருந்ததாகவும், அது நெபுலா (Nebula) என்னும் பெயரால் குறிக்கப் பெற்றதாகவும், அதன் விரைந்த சுழற்சியினால் அதிலிருந்து பல பாகங்கள் பிய்த்து எறியப்பட்டதாகவும், அந்த நெபுலாவின் நடுப் பாகமே ஞாயிறு என்பதாகவும் முன்னோரிடத்தில் (இந்நூலில்) கூறப்பட்டுள்ளது. இது நெபுலாக் கொள்கை’ எனப் படும். சர் ஜேம்சு ஜீன்சு (Sir James icans) என்பவர். ஞாயிற்றின் அண்மையில் வேறொரு விண்மீன் நெருங்கியதால் சில விளைவுகள் ஏற்பட்டன என்று ச. தியுள்ளமையும் முன்னரே இந்நூலில் ஓரிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றின் தோற்றம் பற்றிய வேறொரு வியத்தகு கருத்தும் உண்டு. விண்பெரு வெளி யில் சுற்றிக் கொண்டேயிருந்த கறுத்த இரண்டு விண் மீன்கள் ஒன்றோடொன்று நெருங்கி மோதிக் கொண்ட போது, அதன் விளைவாக ஒரு பெரிய ஆற்றல் தோன்றியதாம்; அந்த ஆற்றலின் திரிபாகிய பரிணாமப் பொருளே ஞாயிறு-என்பதாகக் கூறப்படுகிறது. நியூட் டவின் இயக்க விதிக்குப் பொருந்த, ஞாயிறு உட்பட எல்லாக் கோளங்களுமே இயங்கிக் கொண்டே உள்ளன வாம். சுருங்கக் கூறின் இறுக்கம் இல்லாத-வாயு வடிவ மான-ஒரு நெருப்புப் பந்தே ஞாயிறு ஆகும். இது வேறு உ-4