பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பெற்று இருத்தல் என்னும் இரு பொருள்கள் உண்டு. இவ்விரு பொருள்களும் இங்கே பொருந்துகின்றன. மரம் செடி கொடிகள் உட்படத் தன் மேல் உள்ள உயிரி களையெல்லாம் மண் தாங்குகிறது; தாங்கிக் காப்பாற்றுவதும் மண்தான். 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்பது வள்ளுவம். இனி இரண்டாவது பொருளுக்குச் செல்வோம்: காற்று, தீ, நீர் ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் நில்லாமல் பரவிச் செல்லக் கூடியன; நீர் ஒரு பொய்கைக்குள் நின்றாலும், பள்ளம் கண்ட வழி ஒடக் கூடியதே. எனவே மண் மட்டும் ஒரே இடத்தில் நிலைத்து இருப்பது கண்கூடு: அடுத்து, மண் கடினமாய்த் தரிக்கும்’ என்பதிலுள்ள கடினம் என்பது பற்றிக் காண்பாம்: கடினம் என்பது செறிவு - இறுக்கம் (Density) என்னும் பொருளைக் குறிக்கும். காற்று, தீ, நீர் ஆகியவற்றை விட மண் இறுக்கம் உடையது என்று சொல்வது மட்டும் போதாது; மண் ணுலகம் எனப்படும் பூமி (Earth) ஞாயிற்றை விடவும் மற்ற கோள்களை விடவும் மிகவும் இறுக்கம் (Density) உ ைடயது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. பூமி ஒரு பங்கு இறுக்கம் உடையது எனில், அதை நோக்க, ஞாயிறும் மற்ற கோள்களும் எவ்வளவு இறுக்கம் உடையன என்பதைப் பின்வரும் பட்டியலில் காணலாம்; -- - பூமி — 1 வியாழன் - 24 ஞாயிறு — .25 சனி — . 13 புதன் — .85 யுரேனஸ் - 22 வெள்ளி — .89 நெப்டியூன் - 20 செவ்வாய் - 71 திங்கள் — .61 - திருக்குறள்-அநம்-பொறையுடைமை - (151). 89 இந்தப் பட்டியலைக் கொண்டு. ஞாயிறு உட்படக் கோள்கள் யாவும், பூமியைக் காட்டிலும் குறைந்த இறுக்கம் உடையவை என்பது புலப்படும். எனவே, உண்மை விளக்கம் எள்னும் நூலில் உள்ள மண் கடின மாய்த் தரிக்கும்’ என்பது, உண்மையில் உண்மை விளக்கமே. மற்றும், சாத்தனார், மணிமேகலைக் காப்பியத்தில், பூமியை மண் திணி ஞாலம்’ என்று குறிப்பிட்டிருப்பதி லுள்ள திணி என்னும் பகுதி, பூமியின் செறிவை. இறுக்கத்தை (Density) உணர்த்துவதும் கண்டு ஒப்பு நோக்கத்தக்கது. மாணிக்க வாசகர், திருவாசகம்-திரு வண்டப் பகுதியில், வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் எனக் கூறியுள்ள தொடர், மேலும் இந்தக் கருத்துக்கு அரண் செய்கிறது. திண்மை = இறு"க்கம். பிற்காலத்தில் தோன்றிய வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளார். முதலியோரும் இக் கருத்தைத் தெரிவித்துள்ளனர். 莺ü: அடுத்த பகுதி வாரி குளிர்ந்தே பதமாம்' என்பது வாரி என்பது நீர். நீர் குளிர்ந்து இருக்கும் என்றொர். தமிழ் மொழியில் நீரைத் தண்ணிர் என அடைமொழி சேர்ந்த பெயரால் வழங்குகின்றனர். தண்மை + நீர் = தண்ணிர். தண்மை என்றால் குளிர்ச்சி. எனவே, குளிர்ந்த நீர் தண்ணிர் ஆகும். சூடு ஏற்றப்பட்ட நீரை வெந்நீர் என்று வழங்கும் பழக்கம் இருப்பினும், பெரும் பாலான நாட்டுப்புற மக்கள், சுடு தண்ணிர் கொண்டு வா என்றே கேட்கின்றனர். தண்ணிக் சூடு ஏற்றப்பட்டு உ-6