பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 லுக்கு வருவோம். காற்று ஒரு கலவைப் பொருள் என்பதும், அதில் உள்ள கலவைகள் இன்னின்ன என்பதும் முன்னர்க் காற்று என்னும் தலைப்பில் தரப்பட்டுள்ள மையைக் காண்க. தாவரங்கள் உயிர்ப்பதனாலும் (சுவாசிப்பதனாலும்) பொருள்கள் எரிவதனாலும் *if surrus (Carbon Dioxide) 2.3 as T33. காற்று மண்டலத் கில் கலக்கும் செய்தியும் முன்னர்க் கூறப்பட்டுள்ளது. எனவே, காற்று இயக்கிப் பல பொருள்களையும் தன் னோடு கலக்கச் செய்து கொள்கிறது என்ற பொருளும் கொள்ளத்தகும். வின் இறுதியாக - ஐந்தாவது பகுதி, பார்க்கில் ஆகாயம் நிரந்தரமாய் நிற்கும் சிதைந்து - என்பதாகும். விண் கிரந்தரமாய், நிறைந்து குடி - விண்வெளி மிகவும் பரத்தது - விரிந்தது - ஆத்த்தது - உயர்ந்தது - ஆதலின் - என நம்மாழ்வார் திருாைய்மொழியில் (10-10-10) கூறி யிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. நிரந்தரமாய் நிற்கும். என்றார். நிரந்தரம் என்றால் வேறுபாடு @rణ: என்று பொருளாம. நீர் + அந்தரம் = நிரந்தரம். அந்தரம் என்றால் வேறுபாடு. தேசாந்தரம் (தேசஅந்தரம்) என்றால் வேறு நாடு. மாதாந்தரம் (மாத - அந்தரம்) என்றால் வேறு வேறு மாதம். ‘நிர்' என்றால் இன்மை. திர்க்கதி கதி இன்மை); நிர்மூலம் (மூலம் இன்மை) முதலிய தொடர்களில் இப் பொருள் உள்ளமை-காணலாம். எனவே நிரந்தரம் 99 என்றால், வேறுபாடு அற்ற தன்மை - அஃதாவது - மாறாத ஒரே நிலை என்று பொருள்கொள்ன வேண்டும் * எப்போதும் நிரந்தரமாய் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.-என மக்கள் பேசிக் கொள்ளும் உலக வழக் காற்றிலும் நிரந்தரம்' என்ற சொல் இப்பொருளில் உள்ளமை கண்டு ஒப்பு நோக்கத்தக்கது. ஐம் முதற் பொருள்களுள் (பஞ்ச பூதங்களுள்) வின் ஒழிந்த மற்ற நான்கும் நிலை மாறும் தன்மையன; விண் பரந்த திறந்த வெளியாதலால் எப்போதும் மாறுவதில்லை. அதனால் தான் நிரந்தரமாய் நிற்கும் என்றார். விண் தன்னிடத் தில் அடங்கி உள்ள பொருள்களின் மாறுதல்களினால் தானும் மாறியதுபோல் தோன்றலாம்: அது சூழ்நிலை யின் மாற்றமே தவிர, உண்மையில் விண்ணின் மாற்றம் ஆகாது. மற்ற தான்கும் அடிக்கடி மாற்றம் பெறுவது போலின்றி விண் எப்போது ம் ஒரே நிலை யாய் - (நிலைத்து) நிற்பதால், நிரந்தரமாய் சிற்கும்’ என்றார். ஐந்தின் வகை விரி வாய்ப்பு வருங் கால் சொல்ல வேண்டியதைச் சொல் லி வைப்பது பலருக்குப் பயன் அளிக்கலாம். எனவே, ஈண்டு மேற்கூறிய ஐம்பொருள்களோடு தொடர்புடைய ஒருடசெய்திடவிளக்கம் தரப்படும்: உடம்பானது ஐந்து முதற்பொருள்களின் உ வி யாலேயே இ ய ங் கு வ த க ச் சொல்லப்படுகிறது. உட்ம்பில் அறிவுப் பொறிகள் ஐந்தும் செயல் பொறிகள் ஐந்தும் உள்ளன. இவற்றை முறையே "ஞானேந்திரியங் கள்', கன்மேந்திரியங்கள்’ என்னும் பெயர்களால் வட மொழியில் வழங்குவர். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தும் அறிவுப் பொறிகள். பேச்சுறுப்பு (வாக்கு), கை, கால், சிறுநீர் கழிக்கும் உறுப்பு, மலம் கழிக்கும் உறுப்பு என்னும் ஐந்தும் செயல் பொறிகள்.