பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இம்மாற்றத்தின் விளைவாக, நீரகம், உயிரகம், கரியம், வெடியம், பாசுவரம், கந்தகம் முதலான தனிமங்களும் தண்ணிரும் தோன்றின. இவற்றிலிருந்து, உறுத்துதல் - உணர்தல் - இயக்குதல் - வளர்தல் இன்ன பிற உயிர்ப் பண்புகளை உடைய கூழ் போன்ற உயிராற்றல் பொருள் (Protoplasm) உருவாயிற்று. - -- - - - -

io ------> <-- -இந்தக் கூழ்போன்ற பொருள், வேதியியல் விசைகள் - சூழ்நிலை அழுத்தம் காரணமாகப் பல சிறு சிறு பாகங் களாகப் பிரிந்தன. இப்பாகங்களினுள்ளே, வேதியியல் இன் யபுடன் கூடிய உள்கரு என்னும் அமைப்பு உருவாகி யது. இந்த உள்கருவோடு கூடிய புரோட்ட்ோ பிளாசம்’ என்னும் உயிராற்றல் பொருளின் நுட்பக் கூறே உயிர் அணு (Cell) எனப்படுவது. இஃதே உயிருக்கு அடிப்படை. இதிலிருந்தே பல்வேறுவகை உயிரிகள் பரிணமித்துத் தோன்றின. - -

-- ------- - o உயிர்கள் தோன்றுவதற்கு அடிப்படை, உயிர் ஆற்றல் பொருளாகிய புரோட்டோ பிளாசக்கூழ் எனப்பட்டது. இந்த உயிர் ஆற்றல் கூழ் தோன்றுவ தற்கு, நீரகம், உயிரகம், வெடியம், கரியகம், பாசுவரம், கந்தகம் முதலான தனிமங்களும். இன்ன. பிறவும் அடிப் படை எனப்பட்டது. இந்தத் தனிமங்களுள் சிலவோபலவோ அல்லது எல்லாமோ, மூலமுதற் பொருள்களா கிய காற்று, நீர், மண் ஆகியவற்றிலும் கலந்திருப்பதாக, இவை பற்றிய தனித் தனித் தலைப்புக்களில் முன்னர்க் கூறப்பட்டுள்ளது. இதனால், பிரபஞ்சத்தில் உள்ள யாவும், ஒன்று திரிந்து மற்றொன்றாகவோ, பல திரிந்த தொகுப்பாகவோ உருவான ஒத்த பரிணாமம் உடை யவ்ை என்னும் கொள்கை உறுதிப்படும். - 107 நாம் வாழும் பூவுலகு முதலிய பெருங்கோள்களும் இவற்றின் துணைக் கோள்களும் எரிவிண் மீன்கள் பலவும் வால்விண் மீன்கள் பலவும் இன்ன பிறவும் ஞாயிற்றிலி ருந்து தோன்றியதாகக் கூறப்பட்டது. அந்த ஞாயிறு எவ்வாறு தோன்றியது என்பது அறியப்படின், பிரபஞ்ச மாகிய விண்வெளியில் உள்ள கோடிக்கணக்கான கோளங் களும் அவ்வாறே தோன்றி யிருக்கக்கூடும் என்பது தன்னில் தானே பெறப்படும். எனவே, ஞாயிற்றின் தோற்றம் பற்றி மீண்டும் ஒருமுறை நினைவு கூர்வாம்: முகில் படலம் : கோடிக்கணக்கான ஆண்டுகட்குமுன், விண்வெளிப் பரப்பில் முகில் (மேகம்) போன்றதோ அமைப்பு சுழன்று கொண்டிருந்த தாம். அந்த அமைப்பு நெபுலா (Nebula) என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. நெபுலா என்றால் ஒருவகை முகில் படலம். அந்நெபுலா வின் விரைந்த சுழற்சியினால், அது பல பாகங் க்ளாகப் பிய்த்து எறியப்பட்டதாம். அந்தப் பாகங் கள், நாளடைவில் குளிர்ந்தும் அடர்ந்தும் இறுகி யும் சிறு சிறு கோளங்களாக மாறினவாம். நெபுலாவின் நடுப்பாகமே ஞாயிறு;-மற்ற சிறுசிறு-கோளங்கள், ஞாயிறு மண்டலத்தைச் சேர்ந்த மற்ற கோள்கள் ஆகும். இது, பிரெஞ்சுப் பேரறிஞர் லாப்பிலாஸ் (Laplace) என்பவரது கொள்கையாகும். இதற்கு நெபு லாக் கொள்கை எனப் பெயர் வழங்கப்படுகிறது. இக் கொள்கையில் சிலருக்கு முழு நம்பிக்கை இல்லையெனி னும், இதன் மையக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படு கிறது. - உஏதோ ஒரு பொருள் ஞாயிறாகவும்-அதிலிருந்து மற்ற கோள்களாகவும் மாறியிருக்க வேண்டும் அல்லவா?