பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 8 X புல்லும் மர ம் ஒரறி வினவே பிறவும் உ.வே அக்கிளைப் பிறப்பே'. என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும் - புல்மரம் முதல உற்றறியும் ஓரறிவுயிர்' என்னும் தன்னுால் நூற்பாவாலும் அறியலாம். ஆனால், இந்தக் கருத்து. மிகவும் பழைய கருத்து; நூற்றுக்கணக்கான-ஏன்-ஆயிரக் கணக்கான ஆண்டு கட்கு முற்பட்ட கருத்து. இன்றைய அறிவியல் (Science) வேறு விதமாகக் கூறுகிறது. மரம் செடி கொடிகள், தொடு அறிவாகிய ஒரறிவுக்கு மேலும் மற்ற அறிவுகளுள் சிலவோ பலவோ உடையனவாக இன்றைய szó za u zerri (Scientists) அறிவித்துள்ளனர். மரஞ்செடி கொடிகள் இனிய இசையினால் மிகுந்த வளர்ச்சி பெறுவ தாக இப்போது நேரடி ஆய்வின் வாயிலாக அறியப்படு கிறது. புதிதாகக் கண்டுபிடிக்கும் சில மருந்துகளை மக்களுக்குக் க்ொடுக்கலாமா-கூடாதா என்பதை அறிய முதலில் செடி கொடிகட்கு இட்டுச் சோதனை செய்து பார்க்கப்படுகிறது. -நச்சுப் பொருளை உட கொள்ளின் மககளைப் போலவே இவை துன்புறுகின்றன. மற்றும் அடிப்ட் டாலோ வெட்டுண்டாலோ அதிர்ச்சி அடைகின்றன. மேலும், மரம் செடி கொடிகள் மக்களைப் போலவே மூச்சு விடுகின்றன-சுவாசிக்கின்றன; ஒரு நேரத்தில் கரியகத்தை (கரியமில வாயுவை) உள்ளிழுத்து உயிர கத்தை (பிராணவாயுவை)வெளிவிடுதலும் ஒருநேரத்தில் x தொல் பொருள்-மரபியல்-28 --------- +- "நன்னூல்-சொல்லதிகாரம்-உரியியல்-4 119 உயிரகத்தை உட்கொண்டு கரியகத்தை வெளிவிடுதலும் செய்கின்றன; இஃது ஒருவகை சுவாசித்தல் அன்றோ? மற்றும், மக்களின் உடம்பு உயிரணுக்களின் தொகுப்பா யிருப்பது போலவே, இவற்றின் உடலும் உயிரணுக் கனின் தொகுப்பாய் இருப்பதாக அறிவியலார் ஆய்ந்து கண்டுள்ளனர்._ - சுமார் எண்ணுாறு அல்லது ஆயிரம் ஆண்டுகட்கு முற் பட்டவரும் தமிழ்ப் பாவேந்தரும் ஆகிய கம்ப்ர் தமது இராமாயணம் என்னும் காப்பிய நூலில் தெரிவித்துள்ள ஒரு கருத்து சண்டு குறிப்பிடத்தக்கது. நாடு விட்டுக் காடு அடைந்த காப்பியத் தலைவனாகிய இராமனைத் திரும்ப அழைத்துவர அவன் தம்பி பரதன் காடுநோக்கிச் சென்று துயரத்தோடு கங்கைக் கரையை யடைந்ததைக் கண்டு, இடம் விட்டுப் பெயராத மரம் செடி புல் ஆண்டு ಅಶ್ವ೯೯೯ தாவரங்களும் இடம்விட்டுப் பெயரும் ഥ,ഴ്ച உயிரிகளாகிய சங்கமங்களும் கூட இரக்கம் கொண்டன என்று கம்பர் பாராட்டியுள்ளார். தாவர சங்கமம் என்னும் தன்ம்ைய யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான்". என்பது பாடல் பகுதி. கம்பர் கூற்றிலிருந்து தாவர . களும் உணர்ச்சி கொள்ளும் தன்மையின என்பது குறிப்பாகப் புலனாகும். - எனவே, மரம் செடி கொடி வகைகள் ஒரறிவு 2- on L-L or எனனும பழைய கருத்து அடிபட்டுப் போகிறது. மற்றும், மக்களுக்கு உள்ளது போலவே மரம் செடி கொடிகட்கும் ஆண்-பெண்-பால் உணர்வு உண்டு. --- -- --------- - - - -- -

  • கம்பராமாயணம்-அயோத்தியாகாண்டம்

குகப் படலம் - 1