பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தலைதாழ்த்திக் குடுகு டென்று தனைச்சுற்றும் ஆண் புறாவைக் கொலைபாய்ச்சும் கண்ணால் பெண்ணோ குறுக்கிற் சென்றே திரும்பித் தலைகாட்டித் தரையைக் காட்டி இங்குவா." என அழைக்கும். மலைகாட்டி அழைத்தா லுங்தான் மறுப்பாரோ மையல் உற்றார்?' ' தாய் இரை தின்ற பின்பு - தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு வாயினைத் திறக்கும்: குஞ்சு தாய் வாய்க்குள் வைக்கும் மூக்கை; தாய் அருந்தியதைக் கக்கித் - ణా குஞ்சின் குடல் நிரப்பும்; ஒய்ந்ததும் தந்தை ஊட்டும் அன் புக்கோர் எடுத்துக் காட்டாம்!” என்னும் பாடல்களிலிருந்து வடித்தெடுத்துக் கொள்ள உாம். எவ்வளவு சுவையான செய்திகள்! - - மக்களாகிய நாம்-மட்டுமே உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண் டிருக்கிறோமே - பறவையினங்கட் குள்ளும் எத்துணை உயர்ந்தவை உள்ளன. பாருங்கள்! புறாக்களின் இன்ட் இல்லற வாழ்வு, மக்களுள் தாறு மாறாய் நடப்பவர்க்கு ஒர் அறைகூவ லன்றோ? மரவகைகளின் காதல் வாழ்வு ஐயறிவு உயிரிகளாகிய பறவை-விலங்குகள் இருக் கட்டும். ஒரறிவு உயிரிகள் எனப்படும். புல் மரம் செடி கொடிகளின் காதல் வாழ்வு முறையினை இனி ஆராய 127 லாம். மரம் செடி கொடிகளின் பூக்களுள் பல வகை உண் இ. ஒரே பூவில் ஆண்பாகமும் டெண் பாகமும் ~ இருப்பது ஒருவகை; ஒரே செடியில் ஆண் பூ தனியாக வும் பெண் பூ தனியாகவும் இருப்பது வேறொருவகை; ஆண் பூக்கள் மட்டுமே உள்ள செடிகள் தனியாகவும் பெண் பூக்கள் மட்டுமே உள்ள செடிகள் தனியாகவும் இருப்பது இன்னொரு வகை. இவற்றை எடுத்துக்காட்டு களுடன் சிறிது விரிவாக ஆராயலாம்: . .

  • - - -

இணையினப் பூஞ்செடிகள் பூவரசில் ஒரே பூவில் ஆண் பாகம், பெண்பாகம் இரண்டும் உள்ளன. சப்பாத்தி, அகத்தி முதலியவற். றிலும் இப்படியே. இத்தகையனவற்றை 'மிதுனச் செடி’ என்பர் - நாம் இவற்றை இணையினப் பூஞ்செடி என அழகு தமிழில் அழைப்போம். ஈரினப் பூஞ்செடிகள் எல்லாச் செடிகளிலுமே ஒரே பூவில் கேசரமாகிய ஆண்பாகமும் அண்ட கோசமாகிய பெண்டபாகமும்இருப்பதில்லை. சில செடிகளில் ஒரு கிளையிலுள்ள ஒரு பூவில் ஆண்பாகமாகிய கேசரம் மட்டும் இருக்கும்; அதற்கு ஆண் பூ என்று பெயராம். அதே அல்லது வேறு கிளையிலுள்ள மற்றொரு பூவில் பெண்பாகம் ஆகிய அண்டகோசம் மட்டும் இருக்கும்; இதற்குப் பெண் பூ என்று பெயராம். பூசணி, பாகல், குப்பை மேனி, ஆமணக்கு முதலியவை இவ்வகையைச் சேர்ந் தவை. இத்தகையனவற்றை துவிலிங்கச் செடிகள்’ என்பர். தமிழில்-ஈரினப்-பூஞ்செடிகள்'- என்று-நாம் சொல்லலாம்.