பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 130 - பார்க்க வேண்டியுள் து. சிறு குழந்தையும் பெரிய வரும் மணந்துகொள் முடியாதுதானே! பேர்ாமுட்டி, கம்பு, சோளம் முதலியன இந்த வகையைச் சேர்ந்தவை. எனவே, மலர்கள் பிற மகரந்தச் சேர்க்கையையே விரும்புகின்றன. ஒரு பூவின் பெண் பாகத்தில் வேறு 'மலரிலுள்ள ஆண் பாகமாகிய மகரந்தப் பொடியைக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வண்டு, தேனி, வண்ணத்துப் பூச்சி முதலியவை செய்கின்றன. இவ்வாறு பிற மகரந்தச் சேர்க்கையால் கருவுறும் மலர்கள் மிக்க மனமும், நிறமும், தேனும், தோற்றக் கவர்ச்சியும் உடையனவாக இருக்கும். இவ்வகை மலர்கள் மனமும் திறமும் கவர்ச்சியும் பெற்றிருப்பது வண்டு முதலியன வற்றைக் கவர்ந்து மயக்கித் தம்பால் இழுப்பதற்கே யாம். அதற்காகத் தேனும் கொடுக்கப்படுகிறது. வண்டு முதலிய ைஒ மலரில் தேன் குடிக்கும்போது அதிலுள்ள மகரந்தத் துணுக்குகளைத் தம்மேல் ஒட்டிக் கொண்டு, வேறொரு மலரில் சென்று அத் துணுக்கு களைத் தற்செயலாக ச் சேர்க்கின்றன. மலர்களிடம் கவர்ச்சியில்லையென்றால் வண்டுகள் அ வ ற் ைற நோக்கிச் செல்ல மாட் உா அல்லவா ? மஞ்சள் குளித்து முகம்மினுக்கி-இந்த つ மாயப்பொடி வீசி கிற்கும் கிலை” என்று தமிழ்க் கவிஞர் தேசி கவிநாயகம் பிள்ளை யவர்கள் சூரியகாந்தியைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பது, உண்மையில் சூரியனை மயக்குவதற்கன்று; வண்டுகளை மயக்கி வரவேற்பதற்கேயாம். இதனை அவர்ே மற்றொரு பாடலில் மலர்களின் வாயில் வைத்து, வண்டின் வரவெதிர் பார்த்து நிற்போம் - நல்ல வாசனை வீசி நிற்போம்” 131 என்று கூறியிருப்பதனாலும் உணரலாம். மற்றும், பொழுது சாயும் மாலை வேளையில் மலரும் முல்ல்ை முதலிய மலர்கள் பளிச்சிட்ட வெண்ணிறமாயிருப்பதன் காரணமும் வண்டுகளை மயக்கி வரவேற்கும் நோக்கமே யாம். இருட்டு நேரத்தில் வெண் ணிறந்தானே பளிச் சிட்டுத் தெரிந்து பார்ப்பவரைக் கவரும் இதனை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனோன்மணியம் என்னும் தமிழ்க் காவியத்திலுள்ள '................. சிெயலர் மலர்க்கு - வெண்மையும் நன் மணம் உண்மையும் இலவேல எவ்வணம் அவற்றின் இட்ட நாயகராம் ஈயினம் அறிந்துவங் தெய்திடும்? அங்ங் னம் மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்?' என்னும் (மூன்றாம். அங்கம் - நான் - ம் அபு : ளால் அறியப் பெறலாம். இங்கே நுணுகி நோக்குவோர்க்கு ஒர் ஐயம் எழ லாம். அதாவது, முல்லை மலர் ஒன்றில் தேன் அருந்தி மகரந்தப் பொடியும் ஒட்டிக்கொண்ட ஒரு வண்டு, அடுத்தாற்போல் மற்றொரு முல்லை மலருக்கே சென்று அம் மகரந்தப் பொடியைச் சேர்க்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஏன், அந்த வண்டு அடுத்தாற:பால ஒர் ஆம்பல் மலருக்கோ அல்லது வேறொரு மலருக்கோ செல்லக் கூடாதா? அங்ஙனம் செல் வின் ஒரு முல்லையின் மகரந்தம் மற்றொரு முல்லையில் சேர்ந்த கருவுறுவது எப்படி? இப்படி ஒர் ஐயம் எழலா மன்றோ? ஆனால் இந்த ஐயத்திற்கு இடமே யில்லை. இது உற்றாய்ந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதா வது-ஒரு-முல்லை மலரில்-தேன்-குடித்த வண்டு, குறைந்தது அரைமணி அல்லது ஒருமணிநேரம் வரையும்