இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10. ஆய்வின் முடிபு இதுகாறும், மாப்பேர் உலகத்தின் தோற்றம் பற். ஜி. யும் உயிர் களின் தோற்றம்பற்றியும் விளக்கம் தரப் பெற்றது. மற்றும் , மாப்பேர் உலகம் தொடர்பான பல்வேறு செய்திகளும் உயிர்கள் தொடர்பான பல்வேறு இயல்புகளும் அறிவிக்கப் பெற்றுள்ளன. - இந்நூலின் தொடக்கத்திலிருந்து இதுவரையும் ஆய்வு செய்து வந்த நெடும் பயனத்தின் பயனாகத் தக்க முடிபும் கிடைத்துள்ளது. அஃதாவது : உலகத் தோற்றம் பற்றியும் உயிர்த்தோற்றம் பற்றியும் கூறும் படைப்புக் கொள்கையும், உயிர்த் தோற்றம்பற்றிய கோள் மாற்றக் கொள்கையும் பொருந்தா; திரிபு மாற்றமாகிய பரிணாமக் கொள்கையே (Evolutionism) பொருத்தமானது என்னும் உண் ைம உள்ளங்கை நெல்லிக் கனியாகும். - 23