பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

ஐந்தாவது பருவம்: இரண்டு பகுதிக்கும் இடையே சுவர் போல் ஜவ்வு தோன்றுகிறது.

ஆறாவது பருவம்: சுவர் போல் தோன்றிய இந்த ஜவ்வு ஒவ்வொரு பகுதியையும் சுற்றிக் கொள்கிறது.

இந்தச் செயல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. ஒரே கருவட்ட மானது இவ்விதம் பிரிந்து கோடிக் கணக்கான கருவட்டங்கள் தோன்றுகின்றன.

இவ்விதம் கருவட்டம் இயங்குவதற்கான அடிப்படை எது? புரோடோபிளாசம்! அதாவது ஜீவதாது. உயிர்க் கஞ்சி. இந்த உயிர்க் கஞ்சி பற்றி இப்போது கவனிப்போம்.


23. ஐம் பெரும் பூதக்கட்டு

நமது உடல் இருக்கிறதே இதற்கு யாக்கை என்று பெயர். யாத்தல் என்றால் கட்டுதல், சேர்த்தல் என்று பொருள். ஆகவே, யாக்கை என்றால் சேர்க்கை, கட்டு எனலாம்.