பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

கட்டு என்றால் எதனால் ஆன கட்டு? தசை, நார், எலும்பு ஆகியவற்றால் ஆன கட்டு என்று சொல்வார்கள். ஐம் பெரும் பூதங்களால் ஆன கட்டு என்றும் சொல்வார்கள். ஐம் பெரும் பூதங்கள் எவை? நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி என்பன. பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்று சொல்வது வழக்கம். பஞ்ச பூதங்கள் என்றும் சொல்வார்கள்.

இந்த உலகமே பஞ்ச பூத சிருஷ்டிதான். அதே மாதிரி உயிர் இனங்களும் ஐம் பெரும் பூதங்களால் ஆன கட்டுதான். இது, நமது முன்னோர் மொழிந்த உண்மை.

இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது? இன்னும் சிறிது விரிவாகச் சொல்கிறது. இந்த ஐம் பெரும் பூதங்களும் தொண்ணூற்றிரண்டு விதமாகப் பரிணாமம் பெறுகின்றன. அவ்விதம் பரிணாமம் பெறும் தொண்ணூற்றிரண்டில் சிறப்பாகக் குறிப் பிடத்கக்கவை பதினெட்டு. இந்தப் பதினெட்டு பூதங்களின் சேர்க்கையே உயிரினம். நாம் என்கிறது அறிவியல்.

'கம்பவுண்டர்' என்கிற சொல் நாம் எல்லோரும் அறிந்ததே. இது ஆங்கிலச் சொல்.