பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

யான தாதுப்பொருள்கள் எல்லாம் நமது உடம்பிலே இருக்கின்றன. நமது உடம்புமாத்திரமா? அல்ல. உயிர் இனங்கள் எல்லாவற்றின் உடம்பிலும் இருக்கின்றன.

இன்னும் சிறிது வலியுறுத்திச் சொல்ல. வேண்டுமானால் இந்தப் பொருள்களின் சேர்க்கையால்தான் உயிர் இனங்கள் தோன்றுகின்றன எனலாம்.

இவ்வளவு தாதுப் பொருள்களும் நம் உள்ளே எவ்வாறு செல்கின்றன? சென்றன! வியப்பாயிருக்கிறது அல்லவா!

நாள்தோறும் நாம் சாப்பிடுகிறோம்.. சாப்பாட்டிலே என்ன இருக்கிறது? மேலே குறிப்பிட்ட தாதுப் பொருள்கள் அவ்வளவும் இருக்கின்றன.

ஆடு மாடுகள் புல் பூண்டுகளையும் செடி கொடிகளையும் மேய்கின்றன. உயிர் வாழ்கின்றன. நாம் காய்கறி வகைகளை உண்ணுகிறோம்; உயிர் வாழ்கிறோம்.

செடி கொடிகள் புல் பூண்டுகளிலே, இந்த தாதுப் பொருள்கள் அவ்வளவும் இருக்கின்றன. பக்குவமாகச் சேர்த்து வைக்கப்

ரக-7