பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

பட்டிருக்கின்றன. காய் கனி வகைகளிலே இந்த தாதுப் பொருள்கள் இருக்கின்றன.

இவற்றை ஆடு மாடுகள் உட்கொள் கின்றன; உயிர் வாழ்கின்றன. நாமும் உட் கொள்கிறோம் உயிர் வாழ்கிறோம். தாவர வகைகள் மேற்சொன்ன தாதுப் பொருள்களை எவ்விதம் சேகரிக்கின்றன?

கவனிப்போம்.


24 தாவரங்கள் சமையல் செய்யும் விதம்

நமது வீடுகளிலே உள்ள தோட்டங்களிலே செடிகளை வளர்க்கிறோம். கீரை பயிர் செய்கிறோம். வாழை பயிர் செய்கிறோம். வெண்டை, அவரை, கத்தரி முதலியன பயிர் செய்கிறோம். அவற்றிற்குத் தண்ணீர் விட்டு வளர்க்கிறோம். வேரிலே ஊற்றிய தண்ணீர் என்ன செய்கிறது? மண்ணிலே கிடைக்கும் தாது சத்துக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு செடிகளின் வேர் வழியாக உள்ளே செல்