பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

மாறுதல்களுக்குப் பின் புரொடோபிளாசம் ஆகின்றன. புரொடோபிளாசம் என்பது ஒரு ரசாயனக் குழம்பு. இந்த ரசாயனக் குழம்பு இன்றேல் உயிர் இல்லை, இந்த ரசாயனக் குழம்பே உயிர் தோன்றக் காரணமாகிறது.


26. உயிர்ப் பாசியின் தோற்றம்

ஆதியில் உயிர் எப்படித் தோன்றியது? இது மிகவும் சிக்கலான கேள்வி. இதற்குப் பலர் பலவிதமான பதில் கூறுவர்.

ஓபரின் என்பவர் ரஷ்ய அறிஞர். பல ஆண்டுகளாக இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அவர் என்ன சொல்கிறார்?

கோடிக் கணக்கான ஆண்டுகள் முன்பு அதாவது சுமார் நூற்று ஐம்பது கோடி ஆண்டுகள் முன்பு, உலகம் எப்படி இருந்தது? கடல்கள் தோன்றின; மலைகள் தோன்றின; ஆறுகள் தோன்றின; பூமியில் இருந்த தாதுப் பொருள்களை எல்லாம் ஆறுகள் கடலில் கொண்டு சேர்த்தன.

கடல் நீர் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அலை மோதிக் கொண்டிருந்தது.