பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்கிறார் திருவள்ளுவர்.

எழுத்துக்கள் எல்லாம அகரத்தை முதலாக உடைய., அதே மாதிரி, உலகமும் ஆதி பகவனை முதலாக உடையது என்று இதற்குப் பொருள் சொல்வார்கள். உலகம் என்பது எது? உலகில் உள்ள உயிர் இனங்கள். அவை ஆதி பகவனை முதலாக உடையன. அதாவது அவற்றின் முன்தோன்றல் ஆதிபகவன். ஆதிபகவன் எது? - புரொடோசுவா.

திருவள்ளுவர் இவ்விதம் நினைத்தாரோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால் இவ்விதம் பொருள் கொள்ளவும் அந்தக் குறள் இடம் கொடுக்கிறது அல்லவா?

புரொடோ சுவா என்பது ஓர் இனப் பெயர். ஒரே கருவட்டத்தால் ஆன உயிர் இனம். இந்த இனத்துக்குத் தான் 'புரொடோசுவா' என்று பெயர். இந்த இனத்திலே இருபதாயிரம் விதம் இருப்பதாக உயிர் நூல் அறிஞர் கூறுகின்றனர். இவற்றுள் ஒன்று 'அமீபா' என்பது.