பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

இரண்டு கருவட்டங்களால் ஆன உயிர் இனம் பவழம். மத்தியிலே குழாய் போலிருக்கும். கடற்பஞ்சுகளை விட இவை மிகத் திறமையானவை. சுறு சுறுப்பாக இயங்கக் கூடியவை. தற்காப்புத் திறனும் உள்ளவை.

இவற்றுக்குப் பிறகு புழுக்கள் தோன்றின. 'அனலிடா' இனம் என்று இவற்றிற்குப் பெயர். பிறகு சிப்பி, நத்தை முதலியன தோன்றின. இவற்றிற்கு 'மெல்லூஸ்கா' என்று பெயர். மெல்லூஸ்கா என்றால் மெல்லிய உடல் உள்ளவை என்று பொருள்.

உலகம் தோன்றியது முதல் சுமார் நூற்றைம்பது கோடி ஆண்டுகள் வரை இருந்த உயிர்கள் இவையே.

அதனால்தான் உயிர் இன வரலாற்றின் தொடக்கத்திலே- வண்டல் குன்றுகளின் வர லாற்றிலே இவை பற்றிய விபரம் தெளிவாக இல்லை.

புராதன ஜீவயுகம், ஆரம்ப ஜீவயுகம் இரண்டும் இருள் படிந்து கிடக்கின்றன.