பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

கடலிலே உயிர்ப்பாசி தோன்றியது. உயிர்ப்பாசியிலிருந்து ஒரே கரு வட்டத்தாலான உயிர்கள் தோன்றின. அமீபா போன்றவை

அதன் பிறகு இரண்டு கருவட்டங்களால் ஆன உயிர்கள் தோன்றின. பவழம் போன்றவை. பின்னர் புழுக்கள் தோன்றின. சிப்பி, நத்தை போன்றவை. மெல்லிய உயிர் இனங்கள், டிரிலோபைட் போன்ற சிறு பிராணிகள் தோன்றின. நீண்ட காலம் வரை இவை தவிர வேறு எந்த விதமான உயிர் இனமும் இல்லை.

பிறகு முதுகுத்தண்டு உள்ளவை தோன்றின. மீன் குலத்தின் மூதாதைகள். இப்படிப் பல காலம் சென்றது. பிறகு கடலில் இருந்த உயிர் இனம் நிலத்துக்கு வரத்தொடங்கியது. நீரிலும் நிலத்திலுமாக மாறி மாறி வாழத் தொடங்கியது.

பிறகு ஓணான் இனம் தோன்றியது. அசுர ஜீவன்கள் தோன்றின. பூமியையும், கடலையும், வானையும் அதிரச் செய்தன.

இந்த அசுர ஜீவன்கள் செய்த அட்ட காசத்துக்குப் பயந்து கடலுக்கே ஓடிப்