பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

போயின சில. இன்னும் சிலவற்றிற்கு இறக்கை முளைத்தன. பறந்து போயின. பறவைகளின் மூதாதைகள் இவையே.

பூமியை மீண்டும் பனி மூடிக் கொண்டது. அந்தக் குளிர் தாங்க முடியாமல் இவை அழிந்தன. பல நூற்றாண்டுகள் வரை பனி கவிந்திருந்தது. பிறகு பனி விலகியது.

குட்டி போட்டுப் பால் கொடுக்கும் உயிர் இனங்கள் தோன்றின. குதிரை, யானை, முதலிய பல்வேறு மிருகங்களும் தோன்றின. மலருள்ள செடிகளும் மரங்களும் தோன்றின.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றன. மலைகளிலும், காடுகளிலும் இருந்த பிராணிகள் மெதுவாகச் சமவெளிக்குச் சென்றன.

அவற்றுடன் செல்லாது தனித்து நின்றன சில. அவை குரங்குகள். இவை, மரங்களிலே வேகமாக ஏறின. தாவித்திரிந்தன. கிளைகளைப் பிடித்து ஊசலாடின.

இவற்றால் இவற்றின் கைகளும், கால்களும் வலுப்பெற்றன. இடுப்பிலே வலு உண்டாயிற்று. நிமிர்ந்து நிற்கத் தொடங்கின