பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சூரியனே. சூரியன் இல்லையேல் நாம் இல்லை நமது வாழ்வும் இல்லை. உயிர் இனம் எதுவும் இல்லை; தாவர இனமும் இல்லை.

அதனால்தான் நமது முன்னோர்கள் சூரியனை வணங்கினார்கள். கடவுள் என்று போற்றினார்கள்.

கிராம விவசாயிகள் காலையிலே எழுந்த உடன் பல் தேய்த்து முகம் கழுவிக் கிழக்கு நோக்கி நின்று சூரியனைக் கும்பிட்டே வேலை தொடங்கினார்கள்.

ஆகவே நாமும் சூரியனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுவது அவசியம்.

முதலில் சூரியனது பிறப்பிடத்தைக் கவனிப்போம். சூரியனது பிறப்பிடம் ஆகாயம்-வெளி-வானம்.

வெளிமுழுதும் வியாபித்திருப்பது எது? வாயு. வாயு என்று சொன்னால் காற்று என்று பொருள் கொள்ளல் கூடாது. 'கியாஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்களே அந்த கன வாயு. கன வாயு எப்படிப்பட்டது? பார்ப்போம்.

பனிக்கட்டியை நாம் எல்லாரும் அறிவோம். அதுதான் 'ஐஸ்.' ஐஸ் எப்படி